கலசபாக்கத்தில் சிறப்பு மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம் 24.07.2023 முதல் நடைபெற்று வருகின்றது.
வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பயனீட்டாளர்கள். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேவைப்படும் ஆவணங்கள்:
வீட்டு மின் இணைப்புகளுக்கு:
1.ஆதார் கார்டு
2 கார்ப்பரேசன், முனிசிபாலிட்டியில் வழங்கப்படும் நடப்பு வீட்டு தீர்வை ரசீது (அல்லது வீட்டு விற்பனை பத்திர பதிவு நகல் (அல்லது) பாகப் பிரிவு பத்திரப் பதிவு நகல் அல்லது நீதிமன்ற உத்தரவு நகல்.
பொது பயன்பாட்டு மின் இணைப்புகளுக்கு :
1. Registration Certificate in the name of Registered Welfare Association (OR)
2. Authorisation Letter from the Occupants Authorising an Occupant to sign in the application in the name of the premises / appartment
மேற்கண்ட சரியான ஆவணங்களை பிரிவு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்தோ அல்லது இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெயர் மாற்ற கட்டணம் ரூ. 726ஐ செலுத்தி அன்றே பெயர் மாற்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளாலாம்.
குறிப்பு : மின் துண்டிப்பில் உள்ள மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய இயலாது
இடம்: பிரிவு அலுவலகம் – கலசபாக்கம்