சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ரொஸ்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நவம்பர் 16-ல் தொடங்கியது. இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 20- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாட்டுக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது இதன் நோக்கமாகும்.
மாதம் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக, தமிழ்நாட்டின் 12 பல்வேறு இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இவர்கள் 8 நாட்கள் காசியில் தங்கியிருந்து காசி,அயோத்தி, கங்கை நதி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் நமது கலசபாக்கத்தில் இருந்து காசி சென்றுள்ள குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
https://kashitamil.iitm.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.