Web Analytics Made Easy -
StatCounter

Started monsoon, how to escape from an electrical accident electricity
தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? – மின்சாரத்துறை!

  1. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.
  2. காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.
  3. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் சென்று தொட முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  4. இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்ல கூடாது, மின் சாதண பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
  5. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்ப்பதோடு, வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCB யை பொருத்தினால் மின் விபத்துகளில் இருந்து தவிர்க்கலாம்.
  6. ஈரக்கைகளால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது , மின் சாதணங்களை பயன்படுத்தும் போது நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட்டு பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  7. மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்ப்பதோடு, மின் கம்பங்களை பந்தல்களாகவோ, விளம்பர பலகைகளாகவோ பயன்படுத்தக்கூடாது.
  8. கட்டிடங்களை கட்டும்போது போதுமான இடைவெளி உள்ளதா என்பதை தெரிந்துக்கொண்ட பின் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
  9. விழாக்காலங்களில் மின் பாதைகளுக்கு அருகில் அல்லது அடியில் தேர் மற்றும் பல்லக்கு இழுக்கும் போது முன்கூட்டியே மின்வாரிய அலுவலர்களுக்கு தெரிவித்து முன்னேற்பாடுகளை மேற்கொள்வதோடு, பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரீல்களில் அலங்கார சீரியல் விளக்குகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *