தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருட காலத்திற்கு மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கியானது 509 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
27.10.2022 அன்று சென்னையில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2022 – 23 முதல் அரையாண்டின் நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. S. கிருஷ்ணன் அவர்கள் தணிக்கை செய்யப்பட்ட முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
Bank’s Results at a glance (₹ in Crores)
Parameters | September 2021 (HY) | September 2022 (HY) |
Growth YoY |
Total Deposits (₹) | 41,022.21 | 43,136.65 | 5.15% |
Total Advances (₹) | 31,597.66 | 34,876.53 | 10.38% |
CASA (₹) | 11,439.32 | 13,192.64 | 15.33% |
Operating Profit (₹) | 688.94 | 763.63 | 10.84% |
Net Profit (₹) | 392.08 | 496.51 | 26.63% |
Net Interest Income | 874.75 | 1032.57 | 18.04% |
Gross NPA (₹) | 1045.26 | 593.34 | -43.25% |
Gross NPA (%) | 3.31 | 1.70 | -48.64% |
Net NPA (₹) | 564.95 | 295.97 | -47.61% |
Net NPA (%) | 1.79 | 0.86 | -51.96% |
Provision Coverage Ratio | 80.50 | 88.58 | 10.04% |
ROA | 1.63 | 1.93 | 18.40% |
ROE | 16.53 | 16.84 | 1.88% |
2022 – 23 முதல் அரைநிதியாண்டில் வங்கியின் செயல்பாட்டினை விளக்கும் சிறப்பம்சங்கள்:
- 2022 – 23 முதல் அரை நிதியாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்க்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குனர் குழு தரும் உற்சாகம், உயர் நிர்வாகக் குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பும் மற்றும் இவற்றிற்கு எல்லாம் மேலாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரும் பொன்னான ஆதரவு ஆகியவை தான் இச்சாதனைகளை எட்டிட உதவியது என்றால் அது மிகையாகாது.
- 2022 – 23 முதல் அரை நிதியாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில