டெட் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வுக்கான அறிவிப்பில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும்.
Recent News:
Gold Rate Increased Today Morning (20.09.2025)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!
Various important reasons why we must eat kiwi fruit daily!!
Auspicious (Nalla Neram) time today (Sep 20th)
கலசபாக்கம் வார சந்தையில் புரட்டாசி சிறப்பு விற்பனை!
மஞ்சள் அலெர்ட்!
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!