கீழ்குப்பத்தில் எருது விடும் விழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில், தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலயத்தில் ஊரணி பொங்கல் திருவிழா மற்றும் எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் கிராம பொதுமக்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் தலைமை தாங்கினர். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு, எருது விடும் திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர்.
விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற நிலையில், எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடலாடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
100-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்ததால், இளைஞர்கள் உற்சாகம் அடைந்து உற்சாக கோஷமிட்டனர். விழாவின் சிறப்பையும், பக்தர்களின் பக்திசார்ந்த உற்சாகத்தையும் உணர்த்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.