பாரம்பரிய விதைகள் மையத்தின் சார்பில் அங்காடி துவக்க விழா வரும் டிசம்பர் 5ம் தேதி (05.12.2025) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு பகுதியில் (நியாய விலைக்கடை அருகில்) நடைபெறுகிறது.
இந்த அங்காடியை சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் கே.வி. ஷைலஜா அவர்கள் துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு பாரம்பரிய விதைகள் மையம் – கலசபாக்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இயற்கை விவசாயிகளின் உற்பத்தியில் உருவான பாரம்பரிய துவக்க விழாவிற்கு விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் வருகை தர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு:
தொடர்பு எண் : 9500435680
இந்த விழா மூலம் பாரம்பரிய விதைகள் பாதுகாப்பு, இயற்கை விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
