வாடன் சம்பா வறட்சியை தாங்கி வளரக்கூடிய அரிய நெல் ரகம். திருவண்ணாமலை மாவட்டத்தை தாயகமாகக் கொண்டது வாடன் சம்பா. அதை ஆடி 18 அன்று மானாவாரியாக புழுதியில் விதைத்து விட்டால் விளைந்து விடும். தண்ணீர் பற்றாக்குறை காலங்களிலும் தாக்கு பிடித்து வளரக்கூடியது . இதனுடைய நெல் வால் உடையது.
சம்பா பட்டத்தில் புஞ்சை நிலத்திலும் வளரக்கூடியது. நீண்ட கால ரகம் இதனுடைய தாளை கூரை வைப்பதற்கு பயன்படும்.நோய் தாக்காத ரகம்.உயரமாக வளர்வதால் களை பறிக்க அவசியம் இல்லை.சிகப்பு அரிசி சுவையானது.இந்த ரகத்தை காக்க அரிசியை வாங்கி ஆதரிப்பீர்.