கொரோனா தொற்று பரவலால் இந்த தை பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து, போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Recent News:
Various health issues we can get if we wear tight fitting clothes!!
Gold Rate Increased Today Morning (18.04.2025)
Be careful!! Eating papads or appalams everyday or in excess amounts could be harmful for your health in these ways!!
போளூர் பேரூராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் தேவை!
திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து!
Try to avoid consuming these vegetables in the summer season!!