Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளைஞர் திறன் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை நடத்தும் இளைஞர் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் இன்று (22.11.2022) கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு அரசு நடத்தும் மாபெரும் தொழில் திறன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ளும் விருப்பம் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் / பெண்கள் www.kaushlpanjee.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வி தகுதி குறித்த விவரங்களை முன்னரே பதிவு செய்து கொள்ளலாம்.

கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்: தொழில் திறன் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்கள் அசல் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு மற்றும் சுயவிபர குறிப்பு (Resume)

தகுதி: 8-ஆம், 10-ஆம், 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டெய்லரிங், இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளமோ, பொறியியல், நர்சிங்.
,

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உடைய ஆண் / பெண் இருபாலரும் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தெறிவித்துள்ளார்.

 

தொடர்புக்கு: வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம், கலசப்பாக்கம் ஒன்றியம்.

9585695179 | 9123548433 | 6382457005,

6379701902 | 9360474079 | 9626461578,

877823554 | 7402268045

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *