Web Analytics Made Easy -
StatCounter

பள்ளி திறப்புக்கான முக்கிய நெறிமுறைகள்!!

பள்ளிகள் திறக்கப்படும் அன்று முழுமையாக மாணவர்கள் பள்ளியை பயன்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தயார் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தை முழுமையாக சுத்தப்படுத்திட வேண்டும். வகுப்பறைகளை சுத்தம் செய்து கரும்பலகைக்கு மை பூசி தயார் செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும்.

6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து பேச்சு, கவிதை, துண்டு பிரசுரம், சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மதிய உணவு இடைவேளை முடிந்து 20 நிமிடங்கள் மாணவர்களுக்கு சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *