Web Analytics Made Easy -
StatCounter

UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), மருத்துவ அலுவலர், விரிவுரையாளர் உள்ளிட்ட 213 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 2 ஆகும். தகுதியுடையவர்கள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.upsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.  

டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாத தரிசனம், தங்குமிடம் டிக்கெட்டுகள் இன்று முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 22ம் தேதி மதியம்…

பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் – புதிய வழிகாட்டி வெளியீடு!

பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.…

சிறப்பு ரயில் முன்பதிவு!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.    

ஆதார் கட்டணம் உயர்வு!

அக்டோபர்-01 முதல் ஆதாரில் புகைப்படத்தை மாற்ற கட்டணம் ரூ.100- லிருந்து ரூ.125-ஆகவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா பணிகள், வரும் 24.09.2025 (புதன்கிழமை) காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் பந்தக்கால் முகூர்த்தம் மூலம் தொடங்குகின்றன. இந்த முகூர்த்தம் சம்பந்த விநாயகர் சன்னதியில் நடைபெறும்.

இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது மத்திய அரசு. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை 7.30…

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

21-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் பம்பையில் 20ம் தேதி சர்வதேச அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. 19,20 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு குறைப்பு.