Web Analytics Made Easy -
StatCounter

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் வரும் அக்டோபர் மாதம் 4 – ஆம் தேதிக்குள் www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆவின் நிறுவனத்தில் ‘ஐஸ்கிரீம், குல்பி’ விநியோகம் செய்ய மொத்த விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் ‘ஐஸ்கிரீம், குல்பி’ விநியோகம் செய்ய மொத்த விற்பனையாளர்கள் அக்டோபர்  10 – ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.

அக்- 27 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.27-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள்…

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம்!

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று  (27.09.2023) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் வாழ்வியல் சிந்தனை பற்றி காணொளி மூலம் பயிற்சி!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக வாழ்வியல் பற்றி சிந்திக்கும் வகையில் தெனாலிராமன் கதைகள் காணொளி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கம். கோவை, மதுரை நெல்லை,திருச்சி,சேலம்,பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 400 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தகவல்…

ரூ.2000 நோட்டுக்களை வாங்காதீர் – போக்குவரத்துத்துறை உத்தரவு!

இம்மாதம் 28ம் தேதி முதல்,பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுக்களை நடத்துனர்கள் வாங்கக் கூடாது… மீறினால், நடத்துனரே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு.

திருவண்ணாமலையில் தொடர் மழையின் காரணமாக வேங்கிக்கால் ஏரி நிரம்பி வழிகிறது!

திருவண்ணாமலையில் தொடர் மழையின் காரணமாக வேங்கிக்கால் ஏரி முழுமையாக நிரம்பி கோடி போனதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் நீர் இருப்பு 13.75 அடி!

கலசபாக்கம் பகுதியில் தொடர்மழை காரணமாக நீர்நிலைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றது கலசப்பாக்கம் செய்யாற்றில் அதிக அளவு நீர் செல்கின்றது மிருகண்டா அணையில் நீர் இருப்பு 13.75 அடி உள்ளது.

திருவண்ணாமலையில் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலையில் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேற்று (25.09.2023) குத்து விளக்கேற்றி, புது ரக துணிகளை பார்வையிட்டு, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,கோ ஆப்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (25.09.2023) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில்…

தமிழகத்தில் 1 முதல் 5 – ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 – ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5 – ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 – ஆம் தேதி வரை நீட்டிப்பு எனவும், 6…

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்!

கலசபாக்கம் சுற்று வட்டாரங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் அதிக அளவு வெள்ளம் செல்கின்றது.

கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமிற்கு ஆட்கள் தேவை!

கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமிற்கு மெக்கானிக், மெக்கானிக் உதவியாளர், Customer Care Executive பணிகளுக்காக ஆட்கள் தேவை. தொடர்புக்கு – 9894603237, 9442262267.

கலசபாக்கத்தில் நேற்று 75.40 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

கலசபாக்கத்தில் நேற்று (24.09.2023) பெய்த மழையின் அளவு 75.40 மில்லி மீட்டராக பதிவு.

டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று (25.09.2023) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 – ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று…