Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் நீர் இருப்பு 13.75 அடி!

கலசபாக்கம் பகுதியில் தொடர்மழை காரணமாக நீர்நிலைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றது கலசப்பாக்கம் செய்யாற்றில் அதிக அளவு நீர் செல்கின்றது மிருகண்டா அணையில் நீர் இருப்பு 13.75 அடி உள்ளது.

திருவண்ணாமலையில் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலையில் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேற்று (25.09.2023) குத்து விளக்கேற்றி, புது ரக துணிகளை பார்வையிட்டு, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,கோ ஆப்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (25.09.2023) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில்…

தமிழகத்தில் 1 முதல் 5 – ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 – ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5 – ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 – ஆம் தேதி வரை நீட்டிப்பு எனவும், 6…

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்!

கலசபாக்கம் சுற்று வட்டாரங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் அதிக அளவு வெள்ளம் செல்கின்றது.

கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமிற்கு ஆட்கள் தேவை!

கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமிற்கு மெக்கானிக், மெக்கானிக் உதவியாளர், Customer Care Executive பணிகளுக்காக ஆட்கள் தேவை. தொடர்புக்கு – 9894603237, 9442262267.

கலசபாக்கத்தில் நேற்று 75.40 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

கலசபாக்கத்தில் நேற்று (24.09.2023) பெய்த மழையின் அளவு 75.40 மில்லி மீட்டராக பதிவு.

டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று (25.09.2023) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 – ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று…

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (செப்டம்பர்-28) இரவு 06:49 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர்-29) மாலை 03:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி உண்டியல் திறப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி உண்டியலில் ரூ.1,94,91,430 மற்றும் 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி காணிக்கை வசூலானது என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அஷ்டமி வழிபாடு!

திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (22.09.2023) அஷ்டமி வழிபாடு நடைபெறுகிறது.

திருவண்ணாமலை தபால் கோட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் 3-ஆம் காலாண்டுக்கான தபால் துறை குறைதீர்வுகள் கூட்டம்!

திருவண்ணாமலை தபால் கோட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் 3-ஆம் காலாண்டுக்கான பொதுமக்களின் தபால் துறை சம்பந்தப்பட்ட குறைதீர்வுகள் கூட்டம் திருவண்ணாமலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள…

SBI வங்கியில் 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

SBI வங்கியில் 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வரும்…

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம்!

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம். டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

கலசபாக்கம் ஏரிக்கரை முழுவதும் பனை விதை விதைக்கும் பணி தொடங்கப்பட்டது!

கலசபாக்கம் ஏரிக் கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 2 ஆயிரம் வேம்பு, புங்கன் விதைகள் நடப்பட்டன. இதனை ஒருங்கிணைப்பாளர் ப.தி.ராஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ப.ரஞ்சித், எஸ்.ஆனந்தன், வைகுந்தவாசன் மற்றும் ஊர்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (21.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்…

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (21.09.2023) காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது.