Web Analytics Made Easy -
StatCounter

முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14 ஆம் தேதி ஞாயிறு முதல் 16 ஆம் தேதி செவ்வாய் வரை தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகளோடு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் காலை 7:30…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மாற்றம் நேற்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வருகின்ற 18-ஆம் தேதி நடைபெறும். வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள…

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (09.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 4 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் நான்காம் நாளான இன்று (09.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்!

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் (10.01.2024) ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது. வரும் 14 – ஆம் தேதி 50,000 பேருக்கும், 15 – ஆம் தேதி 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம்…

பொங்கல் அன்று திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!

பொங்கல் அன்று (15.01.2024) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (08.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 3 – ஆம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான நேற்று (08.01.2024) இரவு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (08.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 3 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று (08.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று (08.01.2024) ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று (ஜன.08) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (07.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் முன்னிட்டு நேற்று (07.01.2024) இரவு விநாயகர் மற்றும் சந்திர சேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து தொடர் மழை பெய்து கொண்டு இருப்பதால் இன்று (08.01.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் AID India அமைப்பின் மூலம் அறிவியல் பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார பயிற்சி வகுப்பில் AID India அமைப்பின் மூலம் இன்று (06.01.2024) சனிக்கிழமை அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் இன்று உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (06.01.2024) சனிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நாளை சிறப்பு அறிவியல் சோதனை வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நாளை (06.01.2024 ) சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் AID India அமைப்பின் மூலம் மாணவர்களுக்காக அறிவியல் சோதனை வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் ஆர்வம் உள்ள குழந்தைகள் கலந்து…

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் ₹1000 ரொக்கமும் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு செய்துள்ளனர்.