Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் 4560 அடி உயரம் கொண்ட மலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மல்லிகார்ஜுனசாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமதி ஆர்.ஏ. பரிமளா திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பொறுப்பேற்பு!

கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி R. A. பரிமளா அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக நேற்று பொறுப்பேற்றார்.

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (07.11.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (07.11.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை…

விமான டிக்கெட் மாற்றம் – புதிய விதிகள் அறிவிப்பு!

முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள், கூடுதல் கட்டணமின்றி விமான டிக்கெட்டை ரத்து செய்யவோ மாற்றிக்கொள்ளவோ முடியும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.  

சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறப்பு!

மண்டல பூஜைக்காக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும். டிசம்பர் 27ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும் என தேவசம் போர்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று (நவ.04) தொடக்கம். 234 தொகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம். ஒரு மாதகால கணக்கெடுப்பு பணிக்கு பிறகு டிச.9ஆம் தேதி வரைவு…

கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (04.11.2025) மாலை 7 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!

நமது கலசபாக்கத்தில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்,கலசபாக்கம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை தொடக்கம்!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நாளை தொடக்கம் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் நாளை முதல் டிச.4 வரை வாக்காளர் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.