Web Analytics Made Easy -
StatCounter

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு நேற்று (25.06.2023) இரவு ஆயிரம்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு…

கலசபாக்கத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக தற்போது மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக தற்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என கலசபாக்கம் மின்சார வாரியம்  தகவல்.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள தோட்டக்கலை பூங்காவினை மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் சென்று ஆய்வு!

திருவண்ணாமலை செங்கம் சாலையில் தோட்டக்கலைத் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள், நேற்று (22.06.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வாரந்தோறும் பரிசு மழை: கடந்த வாரம் வெள்ளி காசுகளை பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.com, tvmalai.in மற்றும் poluronline.com இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற பார்வையாளர்கள்.1. அனிதா – விண்ணுவாம்பட்டு2. கமலக்கண்ணன் – திருவண்ணாமலை3. பாண்டியன் –  லாடவரம்

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Paramedical Degree Courses) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் . சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online application)…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19.06.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.06.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

கலசபாக்கம் கிளை நூலகத்தில் குழந்தைகளோடு கலந்துரையாடல்!

இயற்கை நேசிப்போம்…. குழந்தைகளோடு கலந்துரையாடல் நாள் : 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை : 10.00 மணி, இடம் : கலசபாக்கம் கிளை நூலகம். தலைமை: கோ.சுந்தரம், தமிழ் ஆசிரியர் (ஓய்வு) சிறந்த கதை சொல்லும்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை (15.06.2023) வைகாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.