Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் 07.12.2022 (புதன்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சந்திரசேகரர்  தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கம் கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செங்கம் கோட்டத்திற்குட்பட்ட வீட்டு மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்பு மற்றும் விவசாய மின் இணைப்பு…

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம்!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த நிலையில் இன்று (08.12.2022) அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவான 06.12.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று  அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6:00 மணி அளவில் மகா தீபம்…

திருவண்ணாமலையில் காா்த்திகை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

காா்த்திகை மாதப் பெளா்ணமி புதன்கிழமை (டிச.7) காலை 8.35 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (டிச.8) காலை 9.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2022 – பத்தாம் நாள் இரவு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் நாள் இரவு நேற்று (06.12.2022) பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.மகா தீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. மகா…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஒன்பதாம் நாள் இரவு !

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஒன்பதாம் நாள் இரவு (05.12.2022) பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காமதேனு வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஒன்பதாம் நாள் காலை !

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஒன்பதாம் நாள் காலை (05.12.2022) விநாயகர், சந்திரசேகரர் – புருஷா முனி வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலையில் இன்றுஅதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் கோயிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை விழாவில் இன்று (06.12.2022) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை பத்தாம் நாள் தீபத் திருவிழாவையொட்டி இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது! 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

கலசபாக்கம் பகுதியில் அகல் விளக்குகள் விற்பனை தொடக்கம்!

கலசபாக்கம் பகுதியில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை துவங்கியுள்ளது.

தீபத் திருவிழாவில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு டிசம்பர் 6-ஆம் தேதி வருகிறவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை www.tvmpournami.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், டிசம்பர் 6-ஆம் தேதி பிற்பகல்…

தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் வண்ணத் தோரணங்களால் அலங்காரம்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கலை கட்ட துவங்கிய நிலையில், கோபுரங்கள் மின்விளக்குகளாலும், கோவில் வளாகம் வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது! தீபத் திருவிழாவில் 25 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு! மலையேறுவதற்கு 2,500 பேருக்கு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – எட்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) இரவு பஞ்ச மூர்த்திகள் குதிரை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – எட்டாம் நாள் மாலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) மாலை பிட்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.