Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (08.11.2022) சந்திர கிரகணத்தை முன்னிட்டு நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2, குரூப்-2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம். அடுத்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி  குரூப் 2,குரூப்…

திருவண்ணாமலை வாணிபக் கழகத்திலிருந்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக பொருட்கள் லாரிகளின் மூலம் விநியோகம்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் பொருட்கள் வாணிபக் கழகத்திலிருந்து பொது மக்கள் விநியோகத்திற்காக பொருட்கள் லாரிகளில் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் அன்னாபிஷேகம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கல்யாணசுந்தரேசுவரர்க்கு  (07.11.2022) நேற்று அன்னம் படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு இன்று பௌர்ணமி பூஜை!

சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு இன்று   (08.11.2022) கலசப்பாக்கம் அண்ணாநகரில் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. பூஜை முடிந்தபின் பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறும் அது…

கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது!

கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் (07.11.2022) நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு குங்கும நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் (07.11.2022) நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 05.11.2022 அன்று ஐப்பசி மாத பெளர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்!

பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்: • எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. •…

திருவண்ணாமலையில் அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை 07.11.2022 பௌர்ணமியான இன்று அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதிகப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்படும் இடங்கள்: • திரௌபதி அம்மன் கோயில் அருகில் •…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்‌ தீப விழா ஏற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து அனைத்து துறை உயர்‌ அலுவலர்களுடான ஆய்வு கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌,  அவர்கள் தலைமையில்‌…

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை வட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக ரூ. 3.20 கோடி மதிப்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்…

நவம்பர் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!

நவம்பர் மாதத்திற்கான (ஐப்பசி) திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நவம்பர் 7 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 04.15 மணிக்கு தொடங்கி மறுநாள்(08.11.2022) செவ்வாய்கிழமை மாலை 04.31 மணிக்கு நிறைவடைகிறது.

கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் பலக்ராதீஸ்வரர் கோவிலில் வரும் 7ம் தேதி அன்னாபிஷேகம்!

உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, வரும் நவம்பர் 7ம் தேதி கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ…

திருவண்ணாமலை அண்ணாமலையார்‌ கோயில் நவ.7 ஆம் தேதி நடை அடைப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார்‌ கோவிலில்‌ (07.11.2022) அன்று அன்னாபிஷேகம்‌ நடைபெறுவதால்‌ அன்று பிற்பகல்‌ 3 மணி முதல்‌ மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. நவம்பர் 7 மற்றும் 8 ஆம் நாளில்…

நவம்பர் 8 ஆம் தேதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8 ஆம் தேதி மதியம் 2: 39 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கின்றது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் (8.11.2022) அன்று காலை 8: 40 மணியில் இருந்து இரவு…

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து குறைவு!

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து தற்போது குறைந்து செல்கின்றது. மிருகண்டா அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரை சுற்று வட்டார கிராமங்களின் ஏரிகளில் நிரம்ப செய்து வருகின்றார்கள்.