Web Analytics Made Easy -
StatCounter

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நிதி உதவி கோரியுள்ள மனுக்களை சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்!

அமைப்புசாரா தொழிலாளர்கள் நிதி உதவி கோரி 02-12-2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட…

தமிழகம் முழுவதும் மார்ச் 3- ந் தேதி போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் மார்ச் 3- ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவிப்பு.  43,000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டம்.

2023-2024 கல்வியாண்டில் கலசபாக்கம் வட்டாரத்தில் சிறந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு விருது!

2023-2024 கல்வி ஆண்டில் கலசபாக்கம் வட்டாரம் சிறந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு விருது கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்…

திருவண்ணாமலையில் நடைபெற்ற பல்வேறு தனித் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு!

திருவண்ணாமலையில் இயங்கி வரும் கான்செப்ட் லோனிங் நிறுவனத்தின் சார்பில் அபாகஸ், வேதிக் மேக்ஸ் மற்றும் சிறப்பு கையெழுத்து போன்ற பல்வேறு தனித் திறன் போட்டிகளில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இப்போட்டிகளில்…

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலசபாக்கம் அடுத்த பர்வத மலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட சிவபக்தர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்கைலாயம் என அழைக்கப்படும் 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் “ஓம் நமச்சிவாய” என்ற கோஷத்துடன் சிவபக்தர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க…

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழக மண்டல மையம், இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு…

திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (பிப் – 23) மாலை 04:22 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (பிப் – 24) மாலை 06:18 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2024: தீர்த்தவாரி!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சாமிகளுடன் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு இன்று(16.02.2024) சப்தமி (ரதசப்தமி )…

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பாடு!

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் இருந்து ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி இன்று (16.02.2024) உற்சவத்திற்கு சுவாமி புறப்பாடு.

கலசபாக்கம் ஆற்று திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பிரபை செய்யும் பணி!

கலசபாக்கம் ஆற்று திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பிரபை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் (29.02.2024) அன்று மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (16.02.2024) தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களால் வரும் (29.02.2024) தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10, +2 தேர்வுகள் இன்று (15.02.2024) தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தேர்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10…