Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்காக 1504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1475 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை தாமாக செய்து காண்பித்தனர்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை தாமாக செய்து வந்து மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்தனர். கணிதம் சார்ந்த கூட்டல், பெருக்கல் போன்றவற்றை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.

‘பாரத் அரிசி’ என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு!

நாடு முழுவதும் அரிசி விலை 15% உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது. 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை வேலை நாள்!

திருவண்ணாமலை கல்வி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை முழு வேலை நாளாக  மாவட்டக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னை – அயோத்தி இடையே விமான சேவையை இன்று தொடங்குகிறது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

இன்று முதல் 8 புதிய வழித்தடங்கள் வழியே அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னையில் பகல்…

பிப்.10ம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்.10ம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. இதற்காக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ₹14.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது. ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.12.50 உயர்ந்து ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தை அமாவாசை 2024 எப்போது? தேதி, நல்ல நேரம் குறித்த தகவல்!

தை அமாவாசையானது பிப்ரவரி 09ஆம் தேதி 2024 அன்று வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது காலை 08:05 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 10, 2024 அன்று அதிகாலை 4:28 மணிக்கு முடிவடைகிறது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பிப்ரவரி 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் இன்று போளூர் தாலுகாவில் ஆய்வு!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் கலெக்டர் திரு. பாஸ்கர பாண்டியன் போளூர் தாலுகாவில் இன்று (31.01.2024) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மக்களுக்கான சேவைகள் அனைத்தையும்…

திருவண்ணாமலை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நேற்று (29.01.2024) மக்கள் குறை தீர்வு நாள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (29.01.2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் பெற்றுக்கொண்டார்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”- மக்கள் குறைதீர்வு திட்டம் நாளை முதல் அமல்!

மக்களின் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம்’ சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை அமல்படுத்தப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிப்பு!

தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று (30-01-2024) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம்,…