Web Analytics Made Easy -
StatCounter

கேலோ இந்தியா போட்டிகளை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் பதிவு செய்வதற்கான இணையதளம்!

கேலோ இந்தியா போட்டிகளை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் ‘TNSPORTS’ என்ற செயலி மூலம் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து போட்டிக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம்.காம் / JB Soft System பணியாளர்கள் குழந்தைகளுடன் இணைந்து JB FARM – இல் பொங்கல் விழா கொண்டாட்டம்!

நமது JB Soft System நிறுவனத்தின் CEO திரு J சம்பத் அவர்களுடன் அனைத்து கலசபாக்கம்.காம் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளும் கலந்துகொண்டு பொங்கலிட்டு பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர். பொங்கல் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை…

மின் இணைப்பில் மொபைல் என்னை புதுப்பிக்க கியூ ஆர் குறியீடு அறிமுகம்!

மின் இணைப்பில் மொபைல் என்னை புதுப்பிக்க, மாற்ற கியூ ஆர் குறியீடு அறிமுகம். கியூ ஆர் குறியீடு அனைத்துபிரிவு அலுவலர்களிலும் இருக்கும் அதை ஸ்கேன் செய்வதன் மூலம் மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியும் என…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!

திருப்பதியில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி ஜனவரி-24 வரை நடைபெறுகிறது. வழிபாட்டு கட்டண சேவை டிக்கெட், தரிசன டிக்கெட் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பெறலாம் என திருப்பதி தேவஸ்தானம்…

ஆதார் அட்டை இனி பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது!

பிறப்பு சான்றாக (DOB) ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (16.01.2024 ) திருவூடல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2024) நேற்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (12.01.2024 ) உத்திராயண காலம் பிரம்மோற்சவம் 7 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஏழாம் நாளான நேற்று (12.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12.01.2024) முதல் 14ம் தேதி வரை சென்னையில் 7 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 12.01.2024 முதல் 14.01.2024 வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்: பேருந்து…

TNPSC குரூப்- 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப்- 2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (11-01-2024) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்.

தமிழ்நாட்டில் பொங்கல் முன்னிட்டு நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14 – ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் பொங்கல் முன்னிட்டு நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14 – ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம். பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (11.01.2024 ) உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஆறாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஆறாம் நாளான இன்று (11.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் தீவிரம்!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” திட்டத்தின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தலின் படி பள்ளி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்று வருகின்றது.

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. https://sabarimalaonline.org என்ற இணையதளத்தின் ஜனவரி 16 முதல் 20 வரை தரிசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கலசபாக்கத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்!

கலசபாக்கத்தில் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் மண்பாண்டங்கள் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கம் திரௌபதி அம்மன் கோவில் அருகில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்!

கலசபாக்கம் திரௌபதி அம்மன் கோவில் அருகில் ரூ.699380/- மதிப்பீட்டில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி. சரவணன் MLA அவர்கள் தொடங்கி வைத்தார். Chairman (ஒன்றிய குழு தலைவர்)…