Web Analytics Made Easy -
StatCounter

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை – TVS நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலைக் கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும். 18ம் தேதி வரை இச்சலுகை நடைமுறையில் இருக்கும். எஞ்சினை RESTART செய்ய…

UPI பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் முன்னதாக ₹1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. .

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் ₹3.12 கோடி, 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

கலசபாக்கத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை கலசபாக்கம் வட்டாச்சியர் துவங்கி வைத்தார்!

கலசபாக்கத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதியினை கலசபாக்கம் வட்டாச்சியர் திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் உண்டியலில் செலுத்தி கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்.

15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது…

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொடி நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (07.12.2023) கொடி நாள் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில் இன்று (07.12.2023) படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் உண்டியலில் செலுத்தி கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மலையிலிருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகா தீபத்தை தரிசித்தனர். மகா தீபம் நேற்றுடன் நிறைவடைந்ததை…

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்படும்…

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (07-12-2023 ) விடுமுறை அறிவிப்பு!

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு.

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் இன்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் (06.12.2023) நிறைவு பெறுகிறது. நாளை (07.12.2023) காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை – அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் நவம்பர் 16 – ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதுமுதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. வழக்கமாக டிசம்பர்…

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நாளையும் 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (06.12.23) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் தடை குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மின் தடை குறித்த புகார்களை 94987 94987 தொலைபேசி எண்ணில் “24X7” மணி நேரமும் மற்றும் அவசர கால உதவி எண்கள் 04175-232363,9499970214 தொடர்பு கொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை மின்…

சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது மிக்ஜாம் புயல்!

சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது ‘மிக்ஜாம்’ புயல். மணிக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல், நெல்லூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக சென்னை…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் 12 மாணவிகள் தேர்வு!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் 12 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், 18 மாணவிகள் 75 மதிப்பெண் முதல் 79 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர்.…

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக மாற்றுதிறனாளிகள் தினவிழா!

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (04.12.2023) வேற்றுமையை ஒழிப்போம் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்…

2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அதிக மழை பதிவு – வெதர்மேன் தகவல்!

2015 – ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு சென்னையில் அதிக மழை பொழிகிறது எனவும் 2015 – ஆம் ஆண்டு சராசரியாக 209 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு தற்போது வரை…