Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (28.11.2023) இரவு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் இல்லை!

கலசபாக்கம் பகுதியில் உள்ள நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் இன்று (29.11.2023) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டது. இன்று வழக்கம் போல் மின்சாரம் இருக்கும்.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (29.11.2023) புதன்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 26 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (27.11.2023 ) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம்…

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் மஹா தீபம் ஏற்றப்பட்டது..!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் கோவிலில் கொடிக்கம்ப எதிரில் தீபம் ஏற்றப்பட்டது.

கலசபாக்கம் அருகே பர்வத மலையில் நேற்று மஹா தீபம் ஏற்றப்பட்டது..!

கலசபாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6…

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 27,28,29,30 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகள்: திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகர் தெப்பல் உற்சவம். செவ்வாய் அதிகாலை பெரிய நாயகர் கிரிவலம்…

திருவண்ணாமலை மலையில் நேற்று (26.11.2023) மகாதீபம் ஏற்றப்பட்டது!

2023 கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நடை நேற்று (26.11.2023) காலை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4:00 மணிக்கு சுவாமி சன்னதிக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது.…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – ஒன்பதாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (25.11.2023) இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – ஒன்பதாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (25.11.2023) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – எட்டாம் நாள் மாலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (24.11.2023) மாலை 4.00 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – எட்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (24.11.2023) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.58 மணிக்கு தொடங்கி மறுநாள்…

திருவண்ணாமலை மகாதீபம் மற்றும் பரணி தீபத்திற்க்கான ஆன்லைன் பாஸ் இணையதளம்!

மகாதீபம் மற்றும் பரணி தீபம் ஆன்லைன் பாஸ் இன்று (24.11.2023) காலை 10.00 மணி முதல் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். பரணி தீபம் காண ஒரு நபருக்கு ரூ.500/- (500 நபர்கள்). மகாதீபம்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – ஏழாம் நாள்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2023 பஞ்சமூர்த்திகள் ஏழாம் நாள்  திருநாள் தேரோட்டம் நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – ஆறாவது நாள் காலை!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2023 பஞ்சமூர்த்திகள் ஆறாவது நாள் காலை திருவீதி உலா நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்