சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!!
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (12.05.2025) பத்தாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் இந்திர விமானத்திலும், பெரிய நாயக்கர் ரிஷப வாகனத்திலும், அம்மன்…
மே 19-ம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்று வருகின்ற சித்திரை பிரம்மோற்சவ விழாவில் பத்தாம் நாளான இன்று சந்திரசேகர் பெரிய மாட வீதி உலா நடைபெற்றது. பின் சித்ரா பௌர்ணமி…
சித்ரா பௌர்ணமி நேற்று இரவு தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கிவிட்டார்கள். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து, கிரிவலமும் மேற்கொண்டனர். சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (10.05.2025) எட்டாம் நாள் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதி உலா நடைபெற்றது.
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.மன்மத தகன நிகழ்ச்சிக்காக 20 அடி உயரம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை, மே 11 ஆம் தேதி இரவு 08.47 முதல் மே 12ஆம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தின் போது, இன்று (10-ம் தேதி) காலை அய்யங்குளம் குளக்கரை மண்டபத்தில் உற்சவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது.
கலசபாக்கம் சித்திரை விழா – 2025 கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி சித்திரை விழாவை முன்னிட்டு இன்று (09.05.2025) ஏழாம் நாள் தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (08.05.2025) வியாழக்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் ஏழாம் நாளான இன்று (09.05.2025) மாலை நடைபெறும் திருத்தேர் வீதி உலாவிற்க்கு தயார் நிலையில் உள்ள திருத்தேர்.
கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை (09.05.2025) சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாட்டியம் ஆடுபவர்கள்: R. ஸ்ரீ சாம்பவி S. ஸ்ரீ செண்பா K. பிரகதி இடம்: கலசபாக்கம் சிவன்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (06.05.2025) செவ்வாய்கிழமை ஆறாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (07.05.2025) நான்காம் நாள் இரவு கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (05.05.2023) திங்கட்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் சித்ரா பவுர்ணமி நாளையொட்டி, மே 11ம் தேதி இரவு 8.47 முதல் மே 12ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் – கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2025) சனிக்கிழமை மூன்றாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் இன்று (03.05.2025) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று இரவு கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடிப்பெண் பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் நடப்பட்டது.