மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலமாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுதல், வங்கி கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்களுக்கு சென்றோ விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Recent News:
Common Causes and Triggers Behind Migraine Attacks
Gold and Silver Prices Fall in Chennai Today; 22K Gold Down by ₹50
Auspicious (Nalla Neram) time today (June 05th)
What Happens When You Eat Chicken Every Day?
Gold Price Drops in Chennai Today; 22 Carat Gold Down ₹20, Silver Falls ₹5
Auspicious (Nalla Neram) time today (June 04th)
JB Soft System Celebrates 25 Years of Excellence and Innovation

