கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் ஸ்ரீ பிரம்பராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி நாட்களிலும் பிற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காலை 06:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற கடலாடி போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் அவர்களிடம் கட்டாயமாக வரும்போது ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மலையின் அடிவாரத்திலிருந்து உச்சி வரை காவல்துறை சார்பில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிப்படுகிறார்கள்.
Recent News:
Gold Rate Decreased Today Morning (29.07.2025)
Can a home humidifier change health, sleep and home environment etc?
Auspicious (Nalla Neram) time today (July 29th)
ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!
கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!
உயர்நீதி மன்றத்திற்கான ஆர்டிஐ இணையதள முகவரி !!