கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் EF Uncollectable Forms (ASD) மீளச் சரிபார்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (08.12.2025) காலை 11 மணிக்கு வாக்காளர் பதிவு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகள், திருத்தங்கள், மற்றும் ASD படிவங்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.


