Web Analytics Made Easy -
StatCounter

ஆதார் கட்டணம் உயர்வு!

அக்டோபர்-01 முதல் ஆதாரில் புகைப்படத்தை மாற்ற கட்டணம் ரூ.100- லிருந்து ரூ.125-ஆகவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது மத்திய அரசு. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை 7.30…

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

21-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் பம்பையில் 20ம் தேதி சர்வதேச அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. 19,20 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு குறைப்பு.

EPFO பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் புதிய வசதி!

வருங்கால வைப்பு நிதி (EPFO) பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி. தீபாவளி பண்டிகைக்கு முன்பு அமல் படுத்த மத்திய அரசு திட்டம் என தகவல்.  

UPI பரிவர்த்தனை வரம்பு உயர்வு!

செப்.15 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு தற்போதைய ரூ.2 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்த…

திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

இன்று (செப்டம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!

தேதி: 13.09.2025நேரம்: காலை 9.00 மணி – பிற்பகல் 3.00 மணிஇடம்: அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெட்டவலம், திருவண்ணாமலைதகுதியுடையவர்கள்8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்டிப்ளமோ, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படித்தவர்கள்பட்டம் பெற்றவர்கள்பொறியியல் மற்றும்…

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கும் கால அவகாசம் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.  

புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை

ஆரணி, போளூர்,செங்கம், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் புதிய காலை மற்றும் இரவு நேர பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த சேவை தினமும் இயக்கப்படும். பேருந்து நேரங்கள்: ஆரணி: காலை…

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

ஊரக வளர்ச்சித் துறையில் 300-க்கு மேற்பட்ட பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியீடு . ஈர்ப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்.30-ம் தேதி வரை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், காட்பாடி, விழுப்புரம் பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம். அதேபோல், சென்னை-திருவண்ணாமலை இடையே பௌர்ணமி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!

கலசபாக்கம் விண்ணுவம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள ‘காளியம்மன் கோவில்’ அருகே, இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல் நாளை (05.09.2025) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. முக்கிய அம்சங்கள்: சங்க உறுப்பினர் பதிவு சங்கம் குறித்து…

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

பொதுத்தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம், 07ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 01:41 மணிக்கு தொடங்கி, 08ம் தேதி (திங்கள்) இரவு 11:38 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு…

UPI மூலம் ரூ.44 கோடி வருவாய்!

ஆகஸ்ட் மாதத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெற்றோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. இதன் மூலம் ரூ.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

நெல் கொள்முதல் மையங்களுக்கு முன்பதிவு தொடக்கம்!

கலசபாக்கம் தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. எலத்தூர், பாடகம், கடலாடி, ஆதமங்கலம், தென்மாதிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.

கலசபாக்கம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு!!

கலசபாக்கம் காம் அலுவலக ஊழியர்கள் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்தனர். பனைமரம் நீர்நிலைகளைக் காப்பதிலும், நிலத்தடி நீரை வளப்படுத்துவதிலும், புயல் போன்ற இயற்கை அனைத்திலிருந்தும் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

நெல் கொள்முதல் விலை உயர்வு!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு. செப்டம்பர் 1 முதல் சன்ன ரக நெல் குவின்டாலுக்கு ரூ.2545-க்கு கொள்முதல் செய்யப்படும். போதுமான கொள்முதல் மையங்கள் திறக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (30.08.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (30.08.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 04:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின்…

திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் அறிவிப்பு!!

10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் திறனறிவு தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு வரும் அக்டோபர் 11 அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் ரூ.50 தேர்வு…

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஜூன் 15 அன்று நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள குரூப் 1 முதன்மைத்…

உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பில் முன்னணி தமிழ்நாடு!

மத்திய அரசு வெளியிட்ட 2023-24 தொழிற்சாலைகள் ஆய்வறிக்கையின்படி, உற்பத்தித் துறையில் மொத்த வேலைவாய்ப்பில் 15% பங்குடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களை விட அதிக வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு வழங்கியதாக…

ஆகஸ்ட் 28, 29 சுப முகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன் – பதிவுத்துறை அறிவிப்பு!

சுப முகூர்த்த நாட்களான ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.

வார இறுதி விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…

விநாயகர் சிலை விற்பனை!

நாளை ( ஆகஸ்ட் 27 -ம் தேதி ) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, கலசபாக்கம் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிபில் ஸ்கோர் தேவையில்லை!

வங்கி, நிதி நிறுவனங்களில், முதல்முறையாக கடன் கேட்டு விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை. சிபில் ஸ்கோர் இல்லை எனக் காரணம் காட்டி கடன் வழங்க மறுக்க கூடாது என நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.