பழங்கோயில் :
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கலசப்பாக்கம் - செங்கம் சாலையில் உள்ள பூண்டிக்கு தெற்கே 1.4 கி.மீ தொலைவில் செய்யாற்றுக்கு தெற்கே இவ்வூர் அமைந்துள்ளது.
ஊர்பெயர் காரணம் :
பழமையான கோயில்களைக் கொண்டு விளங்குவதால் பழங்கோயில் என வழக்கில் வழங்கப்பட்டாலும், வரலாற்று நூல்களும், கல்வெட்டுகளும் 'பழங்கோளூர்' என்று குறிப்பிடுகிறது. பல்குன்ற கோட்டத்தில் அடங்கிய 8 ஊர்களில் பழங்கோளூர் என்ற ஊரும் உண்டு. கி.பி. 976 - ல் சோழ மன்னன் உத்தம சோழனின் 6 - ஆம் ஆட்சியாண்டில், இவ்வூர் 'திருப்பழங்கோளூர்' என்றும், முதலாம் இராசராசனின் காலத்தில் பழங்கோளூர் என்றும், மூன்றாம் இராசராசனின் 29 - ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1224) 'திருப்பழங்கோயில்' என்றும் மாற்றமடைந்துள்ளதை கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. பிறகு, பழங்கோயில் என்ற பெயரிலேயே இன்றுவரை அழைக்கப்படுகிறது.
கிராம ஊராட்சியின் பெயர் : பழங்கோயில் | ||
---|---|---|
பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 - 2024 ) |
திரு ப. செல்வராஜ் |
பழங்கோயில் அறிமுகம்
இந்த ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1845 ஆகும். இவர்களில் பெண்கள் 941 பேரும் ஆண்கள் 904 பேரும் உள்ளனர்.
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.12.2024 ) மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.12.2024) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…
கலசபாக்கம் அருகே பழங்கோவில்-பூண்டி ஊர்களை இணைக்கும் பாலம் கட்டும் பணி தொடங்கியது!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள பழங்கோவில் கிராமத்தில் 2300-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மழைக்காலங்களில் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நேரங்களில், இப்பகுதி மக்கள் பில்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஊர்களைச் சுற்றி வெளியூர்…
கலசபாக்கம் பகுதியில் நாளை (09.11.2024) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (09.11.2024) சனிக்கிழமை…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (15.06.2024) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் இல்லை!
கலசபாக்கம் பகுதியில் உள்ள நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் இன்று (29.11.2023) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டது. இன்று வழக்கம் போல் மின்சாரம் இருக்கும்.
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (29.11.2023) புதன்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.09.2023) வியாழக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (16.06.2023) வெள்ளிக்கிழமை காலை மணி முதல் பிற்பகல் 12.00 மணிவரை (மாற்றத்துக்கு…
கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் 29 ஆம் ஆண்டு அலகு குத்தும் திருவிழா!
கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 29 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி மாசி மாத அமாவாசை நாளான இன்று (20.02.2023) அலகு குத்தும் திருவிழா…
கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (19.11.2022) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை…