நேற்று முன்தினம் கலசபாக்கம், போளூர், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து நேற்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
புதுப்பாளையம் அருகே உள்ள ஜப்திகாரியந்தல் கிராமத்தில் பெய்த மழையினால் அந்த கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது. கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் வடியாமல் தேங்கி காணப்படுகிறது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கலசபாக்கம் -187, வெம்பாக்கம் -16.60, செய்யாறு -26, வந்தவாசி -28, ஆரணி -35.20, தண்டராம்பட்டு -37, செங்கம் -40.40, சாத்தனூர் அணை -44.60, திருவண்ணாமலை -48.60, கீழ்பென்னாத்தூர் -61.60, சேத்துப்பட்டு -74.60, போளூர் -107.