10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதையடுத்து மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதிய அனைத்து மாணவா்களுக்கும் இன்று (18.08.2023) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று (18.08.2023) காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.
தனித்தோ்வா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தோ்வெழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Gold Rate Decreased Today Morning (09.07.2025)
Having liver damage, then your feet might show these signs, take care!!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (11.07.2025) அன்று மின் நிறுத்தம்!
வாகன் & சாரதி போர்ட்டலில் மொபைல் எண் புதுப்பிப்பு வசதி!
Get immediate relief from constipation during summers by consuming these important foods!!
Gold Rate Increased Today Morning (08.07.2025)
ஆனி பவுர்ணமி கிரிவலம் 2025 சிறந்த நேரம்!