Web Analytics Made Easy -
StatCounter

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 2 நாட்களுக்கு, நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில், தமிழ்நாடு – இலங்கை கடலோரத்தை…

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணிக்காக இன்று (25.11.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணிக்காக இன்று (25.11.2024) மின் நிறுத்தம் செய்யப்பட்டது என கலசபாக்கம் மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை நூலக உறுப்பினர் அட்டையை மாணவர்களுக்கு வழங்கினார்!

கலசபாக்கம் முழு நேர கிளை நூலகத்தின் நூலக உறுப்பினர் அட்டையை கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி M.முத்துமாரி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

போக்குவரத்து துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியீடு!

போக்குவரத்து துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 52 அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியல் https://www.arasubus.tn.gov.in/motel.php வெளியிடப்பட்டுள்ளது.

கலசபாக்கத்தில் மாரியம்மன் கோவில் அருகில் இன்று (23.11.2024) கிராம சபை கூட்டம்!

கலசபாக்கத்தில் மாரியம்மன் கோவில் அருகில் இன்று (23.11.2024) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துப்புரவு பணியாளர்களை பாராட்டி சால்வை அணியப்பட்டது.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இன்று (23.11.2024) தங்களுக்குத் தெரியாத விவரங்களை கணினி மூலம் தேடி அறிந்து கொள்கிறார்கள்.

JB Soft System – கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாராந்திர பயிற்சி நிகழ்வு!

JB Soft System நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு ஜெ. சம்பத் (CEO) தலைமையில், கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாராந்திர பயிற்சி நிகழ்வு இன்று (23.11.2024) நடைபெற்றது.இந்த நிகழ்வில், அலுவலக பணியாளர்களுடன் உரையாடிய அவர், தற்போதைய…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம்!

வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் இன்று (23.11.2024) மற்றும் நாளை (24.11.2024) ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாமானது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்…

24 நாட்கள் பொதுவிடுமுறை அறிவிப்பு!

2025-ம் ஆண்டில் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்தது. தமிழக அரசு 2025-ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்!

நவ.1-ம் தேதி நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை நாளை (23.11.2024) அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கலசபாக்கம் அருணா TVS குறுகிய கால சலுகை – 50% தள்ளுபடி!

கலசபாக்கம் அருணா TVS குறுகிய கால சலுகை – 0% வட்டி முதல் மிக குறைந்த முன்பணம் மிகக் குறைந்த வட்டி சுலப தவணை முறை நீங்கள் வாங்கும் அனைத்து வாகனங்களுக்கும் எக்ஸ்ட்ரா பிட்டிங்…

திருவண்ணாமலை மகா தீபத்தன்று அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அன்னதானம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே அனுமதி…

கலசபாக்கம் அருகே பழங்கோவில்-பூண்டி ஊர்களை இணைக்கும் பாலம் கட்டும் பணி தொடங்கியது!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள பழங்கோவில் கிராமத்தில் 2300-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மழைக்காலங்களில் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நேரங்களில், இப்பகுதி மக்கள் பில்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஊர்களைச் சுற்றி வெளியூர்…

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16-ல் துவங்கி 23 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. டிசம்பர்- 24 முதல் 2025 ஜனவரி -1 வரை விடுமுறை. ஜனவரி -2…

இயற்கை வேளாண்மை களப்பணிக்கான பயிற்சிப் பட்டறை!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையமும் தாளாண்மை இதழும் இணைந்து நடத்தும் இயற்கை வேளாண்மை களப்பணிக்கான பயிற்சிப் பட்டறை. இது தொழில்நுட்பப் பயிற்சி அல்ல, தலைமைப் பண்பு வழிகாட்டல், தமிழகத்தில் இயற்கை வேளாண்மைப்…