Web Analytics Made Easy -
StatCounter

வரும் 25-ம் தேதி திருவண்ணாமலையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிப்பு.    

அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று 23-ம் தேதி கடைசி நாள்.    

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு!

UPSC CSE 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 1,009 பேரில் 335 பேர் பொதுப்பிரிவினர். 109 பேர் EWS பிரிவினர், விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in…

குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஜூலை மாத முக்கிய சேவை.. இன்று முன்பதிவு தொடக்கம்!

திருப்பதி கோயிலில் ஜூலை மாத கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.  ஜூலை மாத சிறப்பு தரிசனம், 300…

சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள்!

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்கப்படும். கிரிவலப் பாதை முழுவதும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பபட்டுள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்…

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல்  பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்.

மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!!

அனைத்து தாலுகாக்களிலும், ஜமாபந்தி நடத்தும் பணியை, மே 31க்குள் முடிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் – திரு சாய்குமார் அறிவிப்பு.    

சர்வே எண், பட்டா விபரம் அறிய புதிய செயலி!

நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் (ஏப்ரல் 21) அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.    

JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!!

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. 24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்.    

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு!!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு. 5ஜி திட்டங்களுக்கான கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.    

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.71,560க்கு விற்பனை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் விலை மாற்றமின்றி ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.