Web Analytics Made Easy -
StatCounter

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு!

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, வேலூர் கோட்டையிலுள்ள பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து, தீபாராதணை காட்டப்பட்டது; நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அஷ்டமி வழிபாடு!

திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (22.09.2023) அஷ்டமி வழிபாடு நடைபெறுகிறது.

திருவண்ணாமலை தபால் கோட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் 3-ஆம் காலாண்டுக்கான தபால் துறை குறைதீர்வுகள் கூட்டம்!

திருவண்ணாமலை தபால் கோட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் 3-ஆம் காலாண்டுக்கான பொதுமக்களின் தபால் துறை சம்பந்தப்பட்ட குறைதீர்வுகள் கூட்டம் திருவண்ணாமலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள…

SBI வங்கியில் 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

SBI வங்கியில் 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வரும்…

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம்!

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம். டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

கலசபாக்கம் ஏரிக்கரை முழுவதும் பனை விதை விதைக்கும் பணி தொடங்கப்பட்டது!

கலசபாக்கம் ஏரிக் கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 2 ஆயிரம் வேம்பு, புங்கன் விதைகள் நடப்பட்டன. இதனை ஒருங்கிணைப்பாளர் ப.தி.ராஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ப.ரஞ்சித், எஸ்.ஆனந்தன், வைகுந்தவாசன் மற்றும் ஊர்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (21.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்…

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (21.09.2023) காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது.

கலசபாக்கம் விநாயகர் சதுர்த்தி கண்கவர் ஊர்வலம்!

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலசபாக்கத்தில் பல இடங்களில் விநாயகப் பெருமான் சிலைகள் வைத்து உற்சாகமாக வழிபட்டனர். மூன்றாம் நாளான நேற்று (20.09.2023) விநாயகப் பெருமானின் திருஉருவச் சிலைகளை பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வீதிகளில் எடுத்துச்…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (21.09.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி,சோழவரம், காப்பலூர்,சோழங்குப்பம்,…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.09.2023) வியாழக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

நமது கலசபாக்கத்தை சேர்ந்த திரு ஜி.பிரதீப் குழந்தைகளுக்கு வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த திரு ஜி.பிரதீப் சமீபத்தில் கலசபாக்கம்.காம் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, உள்ளூர் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியின்…

பழனி மலை முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டுவர அக்.1ம் தேதி முதல் தடை!

பழனி மலை முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டுவர அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தடை படிப்பாதை, ரோப்கார் பகுதிகளில் கைபேசி பாதுகாப்பு மையங்களில் வைத்து செல்லலாம். தரிசனத்திற்கு…

கலசபாக்கம் ஏரியை அழகுபடுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புங்க மரங்களும், பனை விதைகளும் நடவு செய்யும் பணி தொடக்கம்!

கலசபாக்கம் ஏரிக்கரை முழுவதும் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றி விட்டார்கள்! அற்புதம், மீண்டும் மரங்கள் முளைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கிராம பொதுமக்கள் சார்பில் புங்க மரங்களும், பனை விதைகளும் நடவு செய்ய…

சூரியனின் L1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணம்!

புவி வட்டப்பாதையில் இருந்து விலகி சூரியனின் L1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் பஜார் வீதியில் புதியதாக விஜய் பெயிண்ட்ஸ் & ஹார்டுவேர்ஸ் கடை திறப்பு!

கலசபாக்கம் பஜார் வீதியில் புதியதாக விஜய் பெயிண்ட்ஸ் & ஹார்டுவேர்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது. உரிமை: திரு.விஜய் கவாஸ்கர். இடம்: கடை எண். 1/335, பஜார் வீதி, கலசபாக்கம். தொடர்புக்கு: 8667602248

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் துவக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (18.09.2023) துவங்கபட்டது.