Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் வழங்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

சிறப்பு பயிற்சி வகுப்புகள்: தொழில் இலக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு Career goals and introduction to Artificial intelligence பற்றிய சிறப்புப் பயிற்சி வகுப்பு வழங்குபவர்: திரு G.பிரதீப் B.E, B.E மெக்கானிக்கல்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதிய இரட்டை அடுக்கு பேருந்து சேவை அறிமுகம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதிய இரட்டை அடுக்கு பேருந்து சேவை அறிமுகம் செய்துள்ளனர். இதில் முக்கிய அம்சமாக பேட்டரியில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு சென்னையில் இன்று (15.09.2023) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்.22ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

புரட்டாசி மாத பூஜைக்காக செப்.17ல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் செப்-18 ஆம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு செப்-17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.

சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு!

ஆவின் நெய் விலை 1லிட்டருக்கு ரூ.70 அதிகரித்து ரூ. 700 எனவும், 500 கிராம் ஆவின் வெண்ணெய் விலை ரூ. 265-ல் இருந்து ரூ. 280 எனவும் இன்று(14.09.2023) முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு துவக்கம்!

தமிழகத்தில் 6 முதல் 12 –ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நாளை (15.09.2023) முதல் காலாண்டு தேர்வு துவக்கம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மேலும் 30 நாட்கள் அவகாசம்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முடிவு குறித்து செப்- 18 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியருக்கு இ-சேவை மையம் மூலம் மேல் முறையீடு செய்தால் 30 நாட்களுக்குள்…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு செப்-21 பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப விழா நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றம் துவங்க உள்ளது. அதைத்தொடர்ந்து பந்த கால் முகூர்த்தம் வருகின்ற 21.09.2023 காலை 7.30 மணிக்கு மேல் 8.30…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல செப்டம்பர்-15ஆம் தேதி 650 பேருந்துகளும், செப்டம்பர் 16 – ஆம்…

மின்வாரிய அதிகாரிகளுடன் கலசபாக்கம் எம்எல்ஏ சந்திப்பு!

மாண்புமிகு தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் அவர்களின் ஆணையின்படி,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக கலசபாக்கம் தொகுதி நோடல் ஆபீஸர் என்கிற முறையில் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு பெ.சு.தி.…

கலசபாக்கம் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

கலசபாக்கம் வட்டார அளவிலான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு IRCTC ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவிற்கான இணையதளம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. www.irctc.co.in என்ற இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மன்னார்குடி – திருப்பதி விரைவு ரயில் வரும் செப்டம்பர் 25 – ஆம் தேதி முதல் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்!

வாரம் மும்முறை இயக்கப்படும் மன்னார்குடி – திருப்பதி விரைவு ரயில் வரும் செப்டம்பர் 25 – ஆம் தேதி முதல் போளூர் மற்றும் திருக்கோவிலூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே…

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு!

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு. தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நேற்று (11.09.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் பெற்றுகொண்டார்.