Web Analytics Made Easy -
StatCounter

சித்ரா பௌர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து பக்தி உணர்வுடன் கிரிவலம் மேற்கொண்டனர்.  

திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவம் – தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தின் போது, நேற்று (30-ம் தேதி) காலை அய்யங்குளம் குளக்கரை மண்டபத்தில் உற்சவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது. 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (28.4.2026) செவ்வாய்க்கிழமை வசந்த உற்சவம் எட்டாம் நாள் உற்சவத்தில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர்க்கு காட்சி அளித்து தீபாரதனைக்கு பின்…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று திருத்தேர்!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவம் விழாவின் ஏழாம் நாளான இன்று (28.04.2026) மாலை நடைபெறும் திருத்தேர் வீதி உலாவிற்காக திருத்தேர் தயார் நிலையில்…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 6

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (27.04.2026) ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.  

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (27.04.2026) திங்கட்கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.