Web Analytics Made Easy -
StatCounter

‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு!

‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், மேலும், இதன் காரணமாக இன்று இரவு வரை பலத்த காற்று மற்றும் கனமழை தொடர் வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தகவல்…

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என…

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் தமிழ் குறுக்கெழுத்து புதிர்கள் பற்றி பயிற்சி!

நமது கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் மேம்படுத்த கணினியில் தமிழ் குறுக்கெழுத்து புதிர்கள் எப்படி நிரப்புவது பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தனர். பின் குழந்தைகள் தாமாகவே…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக 4 தாலுக்காவை சார்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய 4 தாலுக்காவை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்கள் விடுமுறை அறிவிப்பு.

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!

சபரிமலையில் நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள்…

அடுத்த 50 நாட்களுக்கு ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 குறைப்பு: பண்டிகை காலத்தையொட்டி தள்ளுபடி!

பண்டிகை காலங்களை முன்னிட்டு, அடுத்த 50 நாட்களுக்கு ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 குறைத்து விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது

தமிழகம் முழுவதும் மழைக்காலத்தையொட்டி 2,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று 2 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும், 100 இடங்களில் மருத்துவ காப்பீடு முகாம்களும் நடைபெறுகின்றன.

கலசபாக்கம் மக்களுக்கு வாக்காளர் பெயர், சேர்த்தல்,நீக்கம்,திருத்தம் சிறப்பு முகாம்!

கலசபாக்கம் மற்றும் விண்ணுவாம்பட்டு பகுதி மக்களுக்கு வாக்காளர் பெயர், சேர்த்தல், நீக்கம், திருத்தம் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 – இல் நடக்கவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்க NPCI அறிவுறுத்தல்!

Google Pay, PhonePe, Paytm போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI)…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு!

சென்னையில் 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர், ரூ.26.50 உயர்த்தப்பட்டு 1,968.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றம்!

சிம் கார்டுகளை அதிகளவில் விற்பனை செய்வது, யார் விற்பனை செய்ய முடியும் என்பது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இனி புதிய சிம் வாங்க திட்டமிட்டால் அல்லது சிம் கார்டு விற்பனையாளராக இருந்தால் இந்த புதிய…

திருக்கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இனிதே நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 17 – ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 23-ந் தேதி தேரோட்டம் நடந்தது.இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக கடந்த 26 – ஆம் தேதி மகாதீபம் திருவண்ணாமலை…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (29.11.2023) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் தற்போது 17.06 கன அடி நீர் இருப்பு!

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் மொத்த நீர்மட்டத்தின் அளவு 22.98 கன அடி. தற்போது 17.06 கன அடி நீர் இருப்பு உள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து கொள்ளலாம்!

மகளிர் உறுப்பினர் மற்றும் மகளிர் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் www.mathisandhai.com என்ற இணையதளத்தின் மூலம் பொருட்களை விற்பனை செய்யலாம். இதைப் பற்றி அந்தந்த மாவட்ட மகளிர் அலுவலகத்தை அணுகவும் என தமிழக அரசு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.