Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (19.12.2023) இரண்டாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (19.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் இரண்டாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் (23.12.2023) சனிக்கிழமை சொர்க்கவாசல் திறப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகின்ற (23.12.2023) தேதி சனிக்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு என்று செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் மார்கழி உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று இரவு (18.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் முதல் நாள் இரவு நடராஜர் அலங்காரம் மற்றும் தீபாராதனை பெருந்திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாணிக்கவாசகர் மாட வீதி உலா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் ‌மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சனி பெயர்ச்சி விழா – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 20.12.2023 ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதால் கட்டண தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. https://thirunallarutemple.org/ என்ற இணையத்தளத்திலும் மற்றும் கோவில் வளாகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்துக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று (18.12.2023) துவங்கி டிசம்பர் 27 – ஆம் தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.…

அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசத்தால் அலங்கரிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று (17.12.2023) பெரிய நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான…

மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை சுற்றி 26 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம்!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி இடையே அமைந்துள்ள பருவதமலை 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பிரம்ம சமேத மல்லிகார்ஜுனார் கோவில் உள்ளது. நேற்று (17.12.2023) மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை…

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

நாளை மார்கழி 1 (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது.…

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு பழனி கோயில் நடை திறப்பு!

மார்கழி மாதம் துவங்கவுள்ளதையொட்டி பழனி மலைக்கோயிலில் வரும் டிச. 17 முதல் ஜன. 15ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.

திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மகா தீப மலையில் தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை மகா தீப மலை மீது தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று மலையின் மீது தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகத்துடன், சிறப்பு பூஜை நடைபெற்றது.

சபரிமலையில் இன்று (14.12.2023) அதிகாலை முதல் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் இன்று (14.12.2023) அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று (13.12.2023) 81,600 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 79,996 ஆக உள்ளது.

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு!

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை…

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் 108 சங்கு அபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10.12.2023) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் ₹3.12 கோடி, 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை மலையிலிருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகா தீபத்தை தரிசித்தனர். மகா தீபம் நேற்றுடன் நிறைவடைந்ததை…

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் இன்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் (06.12.2023) நிறைவு பெறுகிறது. நாளை (07.12.2023) காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை – அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் நவம்பர் 16 – ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதுமுதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. வழக்கமாக டிசம்பர்…

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!

சபரிமலையில் நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள்…

திருக்கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இனிதே நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 17 – ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 23-ந் தேதி தேரோட்டம் நடந்தது.இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக கடந்த 26 – ஆம் தேதி மகாதீபம் திருவண்ணாமலை…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (29.11.2023) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (28.11.2023) இரவு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 26 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (27.11.2023 ) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம்…