Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு… விவசாயிகள் மகிழ்ச்சி!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏரிகளில் உபரிநீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கலசபாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த தொடர் மழையால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் ஜவ்வாது மலையில் பெய்த கனமழையின் காரணமாக மிருகண்டா அணை, செண்பகத்தோப்பு அணை, குப்பநத்தம் அணை என 3 அணைகளும் நிரம்பி வருகிறது.

செய்யாற்றின் இரு கரையோர மக்கள் எவரும் ஆற்றில் இறங்கி குளிப்பது, ஆற்றில் துணிகளை துவைப்பது, விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை ஆற்றின் அருகே விளையாட அனுமதிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என மாவட்டம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *