Web Analytics Made Easy -
StatCounter

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (10.06.2026) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (10.06.2026) புதன்கிழமைகாலை 9.00…

ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைத்த TBR சார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

அன்பிற்கினிய TBR சார்… இன்று கலசபாக்கம் ஒரு ஆசிரியரை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைத்த ஒரு மாபெரும் வழிகாட்டியை இழந்துள்ளது. திரு. T.B. ராமசாமி (TBR சார்) அவர்கள் உயிரியல் பாடத்தை கற்றுக்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (28-05-2026)  வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

வைகாசி மாத கிரிவல நேரம்!

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல 30.05.2026 பிற்பகல் 12:50 மணி முதல் மறுநாள் 31.05.2026 பிற்பகல் 02:41 மணி வரை உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தண்டராம்பட்டு தாசில்தாராக பணியாற்றி வந்த ஆ. தேன்மொழி கலசபாக்கம் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். கலசபாக்கம் தாசில்தார் கே. துரைராஜ் கீழ்பென்னாத்தூருக்கும், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் வி. ராஜேந்திரன்…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26% தேர்ச்சி பெற்றுள்ளது.122 மாணவர்களில் 115 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் பேரரசு – 472, ஜெகதீஷ் – 451, கார்த்திகேயன் –…

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.2% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.2% தேர்ச்சி பெற்றுள்ளது. 118 மாணவிகளில் 110பேர் தேர்ச்சி பெற்றனர். P.கார்த்திகா 488 மதிப்பெண்களுடன் முதல் இடம், P.காவியா 483 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம்,…

கலசபாக்கம் அருகே கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி!

கலசபாக்கம் அருகே கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 54 மாணவர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். சபரிகிரி – 480, சந்தோஷ் – 478, செந்தமிழ்ச்செல்வன்…

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற தளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

12 நாள் சிறப்பு கோடை பயிற்சி வகுப்பு தொடக்கம்!

வேதாத்திரி மகரிஷி அறிவொளி அறிவகம் சார்பில் 5 முதல் 18 வயது குழந்தைகளுக்கான 12 நாள் சிறப்பு கோடை பயிற்சி வகுப்பு மே 17 முதல் மே 28 வரை நடைபெறுகிறது. யோகா, தியானம்,…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (16.05.2026) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (16.05.2026) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…

ஆன்லைன் மூலம் நீட் தேர்வு!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும். OMR முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

திருப்பதியில் குவியும் பக்தர்கள்..!

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இலவச தரிசன வரிசையில் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!

அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார். நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவானது. மேலும், 5 உறுப்பினர்கள் நடுநிலையாக இருந்தனர்.

வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

வைகாசி மாத சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மே 19-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. அதன்பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.  

தங்கத்தின் சுங்க வரி உயர்வு!

தங்கம், வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 15% உயர்ந்துள்ளது புதிய வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். அல்லது, தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையின் www.tnvelaivaippu.gov.in என்ற…

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விபி ஜி ராம் ஜி திட்டம்!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை- 1 முதல் அமல். 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்வு என…

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி பெற்றுள்ளது. 148 மாணவிகளில் 145 பேர் தேர்ச்சி பெற்றனர். ச. தமிழரசி 562 மதிப்பெண்களுடன் முதல் இடம், அ. லோகேஸ்வரி 544…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் 91.2% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 147 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 91.2 சதவீத தேர்ச்சி…

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!

பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ஆம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.        

12-ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87% தேர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 11,583 பேரும், மாணவிகள் 13,280 பேரும், மொத்தமாக 24,863 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.87% பெற்று 32 வது இடத்தை பெற்றுள்ளது.  

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.20% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.1% மற்றும் மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம். மேலும், தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 1441 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.

வணிகர் தினம் 2026

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வணிகர்களை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் அனைத்து…

சித்ரா பௌர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து பக்தி உணர்வுடன் கிரிவலம் மேற்கொண்டனர்.  

திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவம் – தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தின் போது, நேற்று (30-ம் தேதி) காலை அய்யங்குளம் குளக்கரை மண்டபத்தில் உற்சவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது. 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (28.4.2026) செவ்வாய்க்கிழமை வசந்த உற்சவம் எட்டாம் நாள் உற்சவத்தில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர்க்கு காட்சி அளித்து தீபாரதனைக்கு பின்…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று திருத்தேர்!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவம் விழாவின் ஏழாம் நாளான இன்று (28.04.2026) மாலை நடைபெறும் திருத்தேர் வீதி உலாவிற்காக திருத்தேர் தயார் நிலையில்…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 6

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (27.04.2026) ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.  

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (27.04.2026) திங்கட்கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத சித்திரா பௌர்ணமி கிரிவலத்திற்கு 30.04.2026 இரவு 9:52 மணி முதல் 01.05.2026 இரவு 11:08 மணி வரை உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 3

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (24.04.2026) மூன்றாம் நாள் இரவு பூத வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட சட்டமன்ற தேர்தல் – 2021 vs 2026 வாக்கு சதவீதம் உயர்வு!

திருவண்ணாமலை மாவட்ட சட்டமன்ற தேர்தல் – 2021 vs 2026 வாக்கு சதவீதம்: தொகுதி 2021 (%) 2026 (%) கூடுதல் வாக்கு (%) திருவண்ணாமலை 72.87 86.78 13.91 செங்கம் (தனி) 81.31…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (23.04.2026) இரண்டாம் நாள் இரவு இரண்டாம் நாள் இந்திர விமானத்தில் வீதி உலா நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? முதலில் உறுதி செய்யுங்கள்

வாக்காளர் அட்டை உங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கவலைப்படுவதற்கு முன், முதலில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் கவலைப்பட வேண்டாம். voters.eci.gov.in இணையதளம் அல்லது Voter Helpline…

பூத் ஸ்லிப் மட்டும் போதாது – அடையாள ஆவணம் கட்டாயம்!

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பூத் ஸ்லிப் என்பது உங்கள் வாக்குச் சாவடியைக் கண்டறிய மட்டுமே; அது அடையாள ஆவணமாகக் கருதப்படாது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஒன்றை எடுத்துச்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று இரவு கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடிப்பெண் பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2026!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 22-ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 02ம் தேதி நிறைவு…

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி அன்னதான விண்ணப்பங்கள் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று அன்னதானம் செய்ய விரும்பும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். செங்கம் சாலை, பழைய மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட…

திருவண்ணாமலை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19,34,852 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம் செங்கம் (தனி) 1,33,674 1,35,310 13 2,68,997 திருவண்ணாமலை 1,20,961 1,28,839 48 2,49,848 கீழ்பென்னாத்தூர்…

கலசபாக்கத்தில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணி!

கலசபாக்கத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘ஆரோக்கிய நடை – ஆரோக்கிய வாக்கு’ என்ற தலைப்பில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து…

பங்குனி உத்திர விழாவில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு!

கலசபாக்கம் அருகிலுள்ள நட்சத்திர கோவிலில் நேற்று (01.04.2026) பங்குனி உத்திர விழாவிற்கு வந்த பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பு குறித்து துண்டு பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கலசபாக்கம் தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், அவர்கள் தலைமையில் இன்று (01.04.2026) கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெவுள்ளதை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல்…

நாளை முதல் சிமெண்ட், இரும்பு விலை உயர்வு!

நாளை முதல் சிமெண்ட் மூட்டை மற்றும் இரும்பு கம்பிகளின் விலைகள் உயர்கிறது சிமெண்ட் மூட்டைக்கு ரூ.70 வரையிலும், இரும்பு டன்னுக்கு ரூ.2000 வரையில் உயர்வு என உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14,560 பேர் விண்ணப்பம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், புதிய பெயர்கள் சேர்க்க 14,560 பேர் விண்ணப்பித்துள்ளனர். தொகுதி வாரியாக: செங்கம் – 2,106 திருவண்ணாமலை – 2,650 கீழ்பென்னாத்தூர் – 1,784 கலசபாக்கம் – 1,921…

திருவண்ணாமலை மாவட்டம் – சட்டமன்ற தேர்தல் 2026 அட்டவணை அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பான அட்டவணை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி: அறிவிப்பு வெளியீடு: 30.03.2026 (திங்கள்) வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: 06.04.2026 (திங்கள்) வேட்புமனு பரிசீலனை: 07.04.2026 (செவ்வாய்) வேட்புமனு திரும்பப் பெறுதல் கடைசி…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், இந்தாண்டு 01.04.2025 முதல் 06.04.2025 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம், அருணாசலேஸ்வரர் மற்றும் அபிதகுசம்பிகையம்மனின்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

கலசபாக்கம் அருகிலுள்ள எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழாவின் ஏழாம் நாள் இன்று (29.03.2026) தேரோட்டம் நடைபெற்றது. இதில்…

கலசபாக்கத்தில் நாளை ஆதார் சேவை மையம் திறப்பு!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஆதார் சேவை மையம் நாளை (29.03.2026) ஞாயிற்றுக்கிழமை செயல்படும். இதில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய ஆதார் விண்ணப்பம், புகைப்படம் மாற்றம் மற்றும் கைபேசி எண்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வகுப்பு 1–9 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில், 2025–26 கல்வியாண்டிற்கான வகுப்பு 1 முதல் 9 வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை (வகுப்பு 1–5) தேதி நாள் பாடம் 06.04.2026 திங்கள் தமிழ் 07.04.2026 செவ்வாய்…

கலசபாக்கம் தொகுதியில் EVM இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கலசபாக்கம் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமரன் மற்றும் வட்டாட்சியர் துரைராஜ் தலைமையில், அனைத்துக்…

3 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் விடுபட்டு இருந்தால், அதனை சேர்க்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம். http://voters.eci.gov.in அல்லது ECINet செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை இப்போதே பதிவு செய்யுங்கள்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழாவை முன்னிட்டு இன்று (23.03.2026) அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 08 ஆம் தேதி (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை…

2026 தேர்தல் முன்னிட்டு கலசபாக்கத்தில் ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, நேற்று (17.03.2026) கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வு…

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் – புதிய வசதி அறிமுகம்!

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் தேர்தல் ஆணையம் – முதல் முறையாக வேட்பாளர்கள் https://suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (16-03-2026)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் விநியோகத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கலசபாக்கம் தாலுகாவிற்கு புதிய வட்டாட்சியாளர் பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவிற்கு புதிய வருவாய் வட்டாட்சியாளராக கே. துரைராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.03.2026) நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 4,219 தேர்வு மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

திருவண்ணாமலையில் சந்திர கிரகணம்: அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 3 நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலின் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கிரகணம் முடியும் நேரத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் – சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். இன்று 02.03.2026 புதன்கிழமை மாசி 18 பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான மக்கள் நீராடி தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01-03-2026)  மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.  

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்!!

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது மொத்தம் 3,412 மையங்களில், 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

AI as Your Co-Founder – நடைமுறை தொழில் பயிற்சி பட்டறை!

“AI as Your Co-Founder – நடைமுறை தொழில் பயிற்சி பட்டறை” தொடக்க நிலை மற்றும் தொழில்முறை நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கைமுறை பயிற்சி நிகழ்ச்சி ஆகும். இந்த பாடத்திட்டத்தில் AI மூலம் தொழில் திட்டமிடல்,…

புத்தகங்கள் வழியே ஒரு பயணம்!

எங்கள் நிறுவனத்தின் ‘Reading Club’ சார்பில், கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அன்று நூலகத்திற்கு ஒரு சிறப்பான கல்விப் பயணத்தை மேற்கொண்டோம். புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் மீது ஆர்வமுள்ள எங்களது குழுவினர், ஒரு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு: • ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் • காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி…

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கலசபாக்கத்தில் மாதந்தோறும் நடைபெறும் பாரம்பரிய விதைகள் மையக் கூட்டத்தில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் கலந்து கொண்டு, விவசாயிகள் தொடர்பான விஷயங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். இதில் வட்டாட்சியர் திருமதி.…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (07.02.2026) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. மின்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (01.02.2026) தைப்பூசம் முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

தை மாத பவுர்ணமி கிரிவலம், 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:13 மணிக்கு தொடங்கி, 02.02.2026 (திங்கட்கிழமை) காலை 4:45 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.…

கலசபாக்கம் தாலுக்கா, காப்பலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்டம், தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள்,கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் காப்பலூர் கிராம மக்களுக்கு கிராமப்புற மதிப்பீட்டு நுட்பங்கள் குறித்து…

பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்!!

பிப்ரவரி 1-ம் தேதி பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். விழுப்புரத்தில் இருந்து காலை 10:10-க்கும் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு பிற்பகல் 12:40 ரயில் புறப்படும் என…

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க 10 நாள் அவகாசம்!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை அரசு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய ATM திட்டம்!

பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2026: தீர்த்தவாரி!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சாமிகளுடன் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு நேற்று (25.01.2026) சப்தமி (ரதசப்தமி )…

ஆற்றுத் திருவிழாவையொட்டி கலசபாக்கத்தில் மின்சார வாரியம் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில், ஆற்றுத் திருவிழாக்களின் போது சுவாமி செல்லும் பாதைகளில் மின் பாதுகாப்பு வழிகாட்டு பலகைகள் நிறுவப்பட்டன. மேலும், விழா நடைபெறும் பகுதிகளில் மின்சார விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள்…

கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று(22.01.2026) கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா நடைபெறும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 2026 ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

திருவண்ணாமலை தை மாத கிரிவலப் பௌர்ணமி பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.13 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4:45 மணிக்கு நிறைவடைகிறது.  இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (22.1.2026) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (22.1.2026) வியாழக்கிழமை காலை…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (22.01.2026) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (22.1.2026) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்…

கலசபாக்கம் பகுதியில் நாளை மின்தடை!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (20.1.2026) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,…

மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம்!

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி இந்த ஆண்டு தை 5 ஆம் தேதி (19.01.2026) திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திர சேகர் எழுந்தருளி தீர்த்தவாரி…

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க அவகாசம் மேலும் நீட்டிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு. டிச.19ம் தேதி முதல் ஜன.18ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.      

கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு இன்று (18.01.2026) காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வரும் (25.01.2026) ஞாயிற்றுக்கிழமை, செய்யாற்றில் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 

திருவூடல் நிறைவடைந்து கிரிவலம் வந்த அண்ணாமலையார்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற திருவூடல் நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அண்ணாமலையார்!

மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், திட்டிவாசல் வழியாக எழுந்தருளி சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இந்த புனித நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் திருவூடல் நிகழ்ச்சி!

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் இன்று தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருமாமுடீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.இதனைத் தொடர்ந்து சன்னதி…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் பெரும் பொங்கல் சிறப்பு வழிபாடு!

கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில், தை மாதம் ஒன்றாம் நாள் பெரும் பொங்கலை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு சந்திரசேகர் மற்றும்…

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் – 10ஆம் நாள் தீர்த்தவாரி!

திருவண்ணாமலையில் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 10ஆம் நாளை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் பக்தி முழக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்!

பேருந்து நிலையம் / போக்குவரத்துக் கழகம் இயக்கப்படும் பேருந்துகள் செல்லும் இடங்கள் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம் திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர்…

பொங்கல் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது  

கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!

கலசபாக்கம் GH மருத்துவமனை அருகில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இன்று 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு

49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்கள் ஆழி பதிப்பகம் (அரங்கு எண் 595–596) மற்றும் காக்கை கூடு (அரங்கு எண் 376–377)…

உத்தராயண புண்ணிய கால கொடியேற்றம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று 06.01.2026 (செவ்வாய்க்கிழமை) காலை, உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. 

திருவண்ணாமலை பேருந்து இயக்கத்தில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் புறநகர் பேருந்துகள்: சென்னை, கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தண்டராம்பட்டு,…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (03.01.2026) சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம். திருக்கோயிலில் ஐந்தாம் பிரகாரம் ஆயிரம் கால் மண்டபத்தில் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01-01-2026)  மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க இன்றே கடைசி நாள்!

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் (31.12.25) ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க அறிவுரை. இணைக்கத் தவறினால் PAN எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் என வருமான வரித் துறை…

திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம், 02.01.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 6:45 மணிக்கு தொடங்கி, 03.01.2026 (சனிக்கிழமை) மாலை 4:43 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.…

ஆற்றுத் திருவிழா 2026 : தீர்த்தவாரி உற்சவ பத்திரிகை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ அருள்மிகு ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” மற்றும் “ அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்” சாமிகளுடன் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார்…

சொர்க்கவாசல் திறக்கும் விழா!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நாளை (30.12.2025) காலை 7.00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கும் விழா நடைபெறுகின்றது.

TNUSRB தேர்வு முடிவுகள் வெளியீடு!

2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (TNUSRB) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் தற்காலிகப் பட்டியல் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

புதிய வீடு வாங்க அரசு சலுகை!

புதிய வீடு வாங்குபவர்களுக்கு தமிழக அரசு முக்கிய சலுகையை அறிவித்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் வில்லாக்கள் வாங்கும் போது, கட்டுமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே செலுத்திய முத்திரைத்தாள் கட்டணத்தை, பத்திரப்பதிவு செய்யும் சமயத்தில் கழித்துக் கொள்ளலாம் என…

இடியாப்பம் விற்க உரிமம் வேண்டும்!

சைக்கிள், இருசக்கர வாகனத்தில் இடியாப்பம் விற்போர் உரிமம் பெற வேண்டும்; ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் – தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு      

மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா – 33 ஏக்கரில் உருவான முக்கிய சிறப்பம்சங்கள்

திருவண்ணாமலை–திருக்கோவிலூர் சாலையில், எடப்பாளையம் ஏரியை மையமாகக் கொண்டு 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர்…

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் டிச.27,28 மற்றும் ஜன.3,4 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் புகைப்படங்கள் புதுப்பிப்பது போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்களின்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்றவர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது முடிவுகளை பார்க்கலாம்.      

புதிய விவசாய மின் இணைப்புகள்: தட்கல் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!

புதிய விவசாய மின் இணைப்புகள் பெற தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (19-12-2025) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (19.12.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (20.12.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…

கலசபாக்கத்தில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கலசபாக்கத்தில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழாவை முன்னிட்டு இன்று, கலசபாக்கம் உட்கோட்டம், போளூர் கோட்டம் சார்பில் மின்சக்தி சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்…

திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.

18 ஆண்டுகளில் ஒரு மரம் ₹1 லட்சம்! சந்தன மர சாகுபடி!!!

சந்தன மரத்திற்கு சந்தையில் உள்ள அதிக தேவை, உயர்ந்த விலை மற்றும் நீண்டகால லாப வாய்ப்பு ஆகிய காரணங்களால், சந்தன சாகுபடி தற்போது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது ஒரு கிலோ சந்தனத்தின் சந்தை விலை சுமார் ₹10,000 ஆக உள்ளது. சராசரியாக 18 ஆண்டுகள் வளர்ச்சிக்குப் பிறகு, ஒரு சந்தன மரத்திலிருந்து…

பருவதமலை கிரிவலம்: கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் பங்கேற்பு!

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் அற்புதமான கிரிவலம், நேற்று (16.12.2025) மார்கழி 1 (தனூர்) மாதப் பிறப்பு முன்னிட்டு நடைபெற்றது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள்…

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் வெளியாகும்!

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிலையை பயணிகள் அறிந்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (17-12-2025)  மார்கழி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.12.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (18.12.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.12.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (18.12.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்…

கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவனுக்கு “கலை அமுது” விருது!

கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் க. பரசுராமன், திருவண்ணாமலை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் நடத்திய கலைப் போட்டியில் கலந்து கொண்டு,“கலை அமுது”…

ஆதமங்கலத்தில் மின்தடை ரத்து !!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (17.12.2025) புதன்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.  

டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை!

தமிழ் நாட்டில் பள்ளிகளுக்கு வரும் டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாட்கள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எழுதி வருகின்றனர்  

கலசபாக்கம் பகுதியில் நாளை மின்தடை!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (17.12.2025) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி,…

கலசபாக்கம் மின்சார வாரியம் தகவல்!

சிறப்பு பராமரிப்பு பணிக்காக இன்று (16.12.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காப்பலூர்,சோழங்குப்பம்,விண்ணுவாம்பட்டு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. – கலசப்பாக்கம் மின்சார வாரியம் தகவல்.

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (17.12.2025) புதன்கிழமை காலை…

மார்கழி 1 முன்னிட்டு நாளை பர்வதமலை கிரிவலம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தின் அமைந்துள்ள பர்வதமலை மார்கழி 1 (தனூர்) மாத பிறப்பு (16.12.2025) செவ்வாய்க்கிழமை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருவார்கள். 4660…

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்ந்ததா? உடனே ஆன்லைனில் சரிபாருங்கள்!

SIR படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த வாக்காளர்கள், தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக சரிபார்க்கலாம். http://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் EPIC Number அல்லது பிற விவரங்களை பதிவு செய்தால், உங்கள் பெயர் பட்டியலில் உள்ளது என…

JS பெண்கள் அழகு நிலையம்

கலசபாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள JS பெண்கள் அழகு நிலையம் மணப்பெண் அலங்காரம் சிறந்த முறையில் செய்து தரப்படும். நகை செட் வாடகைக்கு விடப்படும். இடம்: கடை எண். 1 JB  காம்ப்ளக்ஸ், பஜார் வீதி,…

நாளை தொடங்குகிறது அரையாண்டு தேர்வு!!

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நாளை (10ம் தேதி) தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறும். பின்னர் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். 6-9ம் வகுப்பு தேர்வு டிச.15 முதல், 10ம் வகுப்பு, பிளஸ்…

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் EF Uncollectable Forms (ASD) மீளச் சரிபார்ப்பு – அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் EF Uncollectable Forms (ASD) மீளச் சரிபார்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (08.12.2025) காலை 11 மணிக்கு வாக்காளர் பதிவு…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 நிறைவு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025, இன்று (07.12.2025) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.    

கலசபாக்கம் மின்சார வாரியம் தகவல்!

கலசபாக்கம் இந்தியன் வங்கி அருகில் மின் மாற்றியை மாற்றும் பணி நடைபெற்று வருவதால், இன்று ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (06.12.2025) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் கிரிவலம்!

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் இன்று (05.12.2025) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 03 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (04.12.2025) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.   

பாரம்பரிய விதைகள் மையத்தின் சார்பில் அங்காடி துவக்க விழா!

பாரம்பரிய விதைகள் மையத்தின் சார்பில் அங்காடி துவக்க விழா வரும் டிசம்பர் 5ம் தேதி (05.12.2025) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு பகுதியில் (நியாய விலைக்கடை அருகில்) நடைபெறுகிறது.…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – பத்தாம் நாள் இரவு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் நாள் இரவு நேற்று (05.12.2025) பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். 

அண்ணாமலையாருக்கு அரோகரா! திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் (03.12.2025 ) மாலை 06.00 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. “அரோகரா” முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஒன்பதாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (02.12.2025) இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் மஹா தீபம் ஏற்றப்பட்டது..!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் கோவிலில் கொடிக்கம்ப எதிரில் தீபம் ஏற்றப்பட்டது. 

பரணி தீபம் ஏற்றப்பட்டது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த, 24 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03ம் தேதி, பஞ்ச பூதங்கள்,என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஒன்பதாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (02.12.2025) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

கார்த்திகை தீப விழா: கொப்பரை எடுத்துச் செல்லும் காட்சி!

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா 2025 முன்னிட்டு, அண்ணாமலையார் மகா தீபத்திற்காக பக்தர்கள் பெரிய அளவிலான கொப்பரையும் நெய்யையும் மலையில் ஏற்றும் காட்சி. 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – எட்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (1.12.2025) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் நாள் மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பத்தாம்…

மகாதீபம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனம் காண annamalaiyar.hrce.tn.gov.in இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.    

திருக்கார்த்திகை தீபம் 2025 – தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் செல்லும் பகுதிகள்!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும் பௌர்ணமி கிரிவலமும் முன்னிட்டு, 02.12.2025 முதல் 05.12.2025 வரை பக்தர்களின் வசதிக்காக அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான நேற்று (29.11.2025) இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெற்றது. 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் காலை!

தீபத் திருவிழா ஆறாம் நாள், இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா. 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான…

கார்த்திகை தீபம் 2025: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விரைவில்!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 நிகழ்வுக்கான பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது. முன்பதிவு செய்ய: annamalaiyar.hrce.tn.gov.in டிக்கெட் விவரங்கள் (கடந்த ஆண்டின் தரவு அடிப்படையில்):   -பரணி தீபம் – Rs.500…

பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 3 கார்த்திகை மகாதீபம்!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலத்தில் உள்ள 4560 அடி உயரம் கொண்ட பருவதமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலில் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி கார்த்திகை தீபத்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (28.11.2025) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரியரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு கார்கள் நிற்கும் இடத்தை அறிவித்தது காவல்துறை!!

திருவண்ணாமலையில் பத்தாம் நாளான கார்த்திகை தீபத்திற்கு கார்களை எங்கெல்லாம் நிறுத்தலாம் என்பதற்கான இடத்தை அறிவித்தது காவல்துறை.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான இன்று (28.11.2025) காலை விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.  

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – நான்காம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நான்காம் நாளான நேற்று (27.11.2025) இரவு பஞ்ச மூர்த்திகளான  விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத…

ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு!

நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் காரணமாக ஒத்திவைப்பு. நாளைக்கு பதிலாக டிச.6-ம் தேதி சனிக்கிழமை இந்த தேர்வு நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  

வாக்காளர் பட்டியல் விண்ணப்பம் தொடக்கம்!

டிசம்பர் 9-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.  

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (27.11.2025) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (26.11.2025) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கலசபாக்கத்தில் வாக்காளர் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் இன்று (25.11.2025) கலசபாக்கம் சத்தியமூர்த்தி நகரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக வாக்காளர் படிவங்களை வீடுகளில் வழங்கும் பணி நடைபெற்று வருவதை…

கார்த்திகை தீபத் திருவிழா – 3ம் நாள் 1,008 சங்காபிஷேகம்!

அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்வை முன்னிட்டு, சன்னதிக்கு அடுத்த பிரகாரத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 1,008 சங்காபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொப்பரை தயார்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொப்பரை தயார் நிலையில் உள்ளது. பத்தாம் நாளான புதன்கிழமை ( 03.12.2025 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (26.11.2025) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது.    

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (25.11.2025) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

வாக்காளர் சேர்க்கை–திருத்தம்: படிவம் 6 & 8 கிடைக்கிறது!

கலசபாக்கம் பகுதியில் தேர்தல் பணிகள் நடைப்பெற்றுவரும் நிலையில், 2006 டிசம்பர் 31 மற்றும் அதற்குப் பிறகு பிறந்தவர்கள் வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவங்களை கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பெறலாம்…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று (25.11.2025) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (24.11.2025) விநாயகர்- மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர்- மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் – வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் – வெள்ளி…

திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025) இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், இருவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பல்லாவரம் அருணாச்சலா சேவா அறக்கட்டளையின் திருக்குடை உபய நிகழ்வு!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பல்லாவரம் அருணாச்சலா சேவா அறக்கட்டளை வழங்கிய பஞ்சமூர்த்திகளுக்கான திருக்குடைகள் உபய நிகழ்வு நேற்று (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2025 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று (24.11.2025) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர…

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (21.11.2025) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் மகாதீபம்!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பட உள்ளன. இரவு பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஒன்பதாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்திலும் மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் எழுந்தருள உள்ளது…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளின் மகா தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் தீபத் திருவிழா ஆறாம் நாள், காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதியுலா வர…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்: காலை நிகழ்வு: விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் வலம் வர உள்ளனர். இரவு நிகழ்வு:…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள் : காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா வர…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் காலை வேளையில் விநாயகர், சந்திரசேகரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பூத வாகனத்தில் திருவீதிகளில் மாடவீதி…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

திருவண்ணாமலை தீப திருவிழாக்கு மலை மேல் தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய்!!

திருவண்ணாமலை: வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக மலை உச்சியில் ஏற்ற வேண்டிய 4,500 கிலோ நெய், நேற்று ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம் 21ம்…

மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் கோபுரங்கள் மின்னொளி அலங்காரத்தில் மிளிருகின்றன. ஒளிவிளக்குகள் பதித்த நிலையில், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் இரவு நேரத்தில் ஜொலித்து, பக்தர்களை கவரும் அழகில்…

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025) திங்கட்கிழமை அன்று தொடங்க இருக்கிறது. காலை, கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாக இருக்கிறது. மாலை வேளையில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (20.11.2025) வியாழக்கிழமை காலை…

திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதியா? – அமைச்சரின் விளக்கம்

திருவண்ணாமலையில் மலையேற்ற அனுமதி குறித்து எழுந்த கேள்விகளுக்கு அமைச்சர் முக்கியமான விளக்கத்தை வழங்கினார். இதுவரை திருவண்ணாமலையில் மலைச்சரிவு ஏற்பட்டதில்லை என்றும், கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகு ஐஐடி…

திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் உதவி மையங்கள் 19–23ம் தேதி செயல்பாடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் வசதிக்காக வாக்காளர் படிவம் நிரப்ப உதவி மையங்கள் இன்று (19.11.2025) முதல் (23.11.2025) வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படுகின்றன. வாக்காளர்கள்,…

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 – வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் வெளியீடு!!

2025-ஆம் ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் சீரான இயக்கத்திற்காக மாவட்ட நிர்வாகம் விரிவான வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை கூட்டத்தை கருத்தில் கொண்டு தற்காலிக…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (17-11-2025)  புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும் என இந்திய…

சபரிமலை மாலை அணிதல்: தமிழ்நாட்டு பக்தர்கள் விரதம் தொடக்கம்!

இன்று கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி சபரிமலைக்கு மாலை அணியத் துவங்கிய பக்தர்கள் தமிழ்நாடு முழுவதும் ஐயப்பன் கோயில்களிலும், பிற ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளுடன் விரதம் தொடங்கினர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கும், பூர்த்தி செய்யும் போது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தெளிவு பெறுவதற்கும், வாக்காளர்களின் வசதிக்காக இன்று (16.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி…

செங்கம் ராஜவீதியில் புதிய E.S. Speciality Clinic – நவம்பர் 16ல் திறப்பு!

செங்கம் ராஜவீதியில் புதிய E.S. Speciality Clinic – நவம்பர் 16ல் திறப்பு செங்கம் ராஜவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட E.S. Speciality Clinic மருத்துவ மையம் வரும் 16 நவம்பர் 2025, ஞாயிற்றுக்கிழமை காலை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (15.11.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (15.11.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…

கலசபாக்கத்தில் பள்ளியில் நூலகர் வாரம் கொண்டாட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று 58வது தேசிய நூலகர் வாரம் மற்றும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுத்துப்பொருள்கள் வழங்கப்பட்டது. நூலகர், வாசகர் வட்டம் பொறுப்பாளர்கள், தலைமை…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

நவம்பர் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. இது நவம்பர் 23-ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சீரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் இன்று காலை வெள்ளோட்டம் நடைபெற்றது. 

கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (13.11.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (13.11.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்…

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

திருப்பதி அங்கப் பிரதட்சண டோக்கனுக்கு புதிய நடைமுறை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் அங்கப் பிரதட்சண இலவச டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம். ஆன்லைனில் வெளியிடும்போது முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் டோக்கன்கள் ஒதுக்க தேவஸ்தானம் முடிவு.  

தெருநாய்கள் அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இருந்து தெருநாய்களை உடனடியாக அகற்ற வேண்டும். கருத்தடை மற்றும் தடுப்பூசி பிறகு மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது. அவற்றை முறையான தங்குமிடங்களுக்கு…

ஆதமங்கலத்தில் மின்தடை ரத்து !!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (07.11.2025) வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.

பென்ஷன் பெறுவோருக்கு இலவச லைஃப் சான்று வீடு தேடி சேவை!

பிஎஃப் பென்ஷன் பெறுவோர் இப்போது வீட்டிலிருந்தபடியே இலவசமாக ‘லைஃப் சான்று‘ பெறலாம். இதற்காக பகுதி தபால்காரர் அல்லது அருகிலுள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியல் பணிகள் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் இன்று (06.11.2025) கலசபாக்கம் தொகுதி விண்ணுவாம்பட்டு ஊராட்சியில் “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025” பணிகளை ஆய்வு செய்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி. தேன்மொழி…

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் 4560 அடி உயரம் கொண்ட மலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மல்லிகார்ஜுனசாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமதி ஆர்.ஏ. பரிமளா திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பொறுப்பேற்பு!

கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி R. A. பரிமளா அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக நேற்று பொறுப்பேற்றார்.

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (07.11.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (07.11.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை…

விமான டிக்கெட் மாற்றம் – புதிய விதிகள் அறிவிப்பு!

முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள், கூடுதல் கட்டணமின்றி விமான டிக்கெட்டை ரத்து செய்யவோ மாற்றிக்கொள்ளவோ முடியும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.  

சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறப்பு!

மண்டல பூஜைக்காக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும். டிசம்பர் 27ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும் என தேவசம் போர்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று (நவ.04) தொடக்கம். 234 தொகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம். ஒரு மாதகால கணக்கெடுப்பு பணிக்கு பிறகு டிச.9ஆம் தேதி வரைவு…

கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (04.11.2025) மாலை 7 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!

நமது கலசபாக்கத்தில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்,கலசபாக்கம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை தொடக்கம்!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நாளை தொடக்கம் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் நாளை முதல் டிச.4 வரை வாக்காளர் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

திருவண்ணாமலை மகாதீபம்: 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.    

கிராம சபை கூட்டம்!!

கலசபாக்கம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி நவம்பர் 1, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கலசபாக்கம். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வுகள் 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரை, 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும். முழு அட்டவணை cbse.gov.in-ல் கிடைக்கும்.

ஐப்பசி மாத கிரிவலம்!

ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (செவ்வாய்) இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (புதன்) இரவு 7:20 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள், மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நவம்பர் 7க்குள் ஓடிஆர் (One Time Registration) மூலம் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை!!

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவம்பர் 10 முதல் 30 வரை நடைபெறும். வீட்டு பட்டியல் மற்றும் சுய கணக்கெடுப்பு நவம்பர் 1 முதல் 7 வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடக்கம்!

சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 90,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி. நவம்பர் 1 முதல் முன்பதிவு தொடக்கம். 70,000 பேர் ஆன்லைனிலும், 20,000 பேர் ஸ்பாட் புக்கிங்கிலும் முன்பதிவு செய்யலாம்.

சாட்ஜிபிடி ஓராண்டு இலவசம் – ஓபன் ஏ.ஐ. அறிவிப்பு!

நவம்பர் 4 முதல், சாட்ஜிபிடி செயலி இந்தியர்களுக்கு ஓராண்டு இலவசமாக வழங்கப்படும் என்று ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நேற்று (28.10.2025) வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 87 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (27.10.2025) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதிஉலா நடைபெற்ற…

ஆதார் பயனர்களுக்கே முதல் முன்பதிவு!

இன்று (அக். 28) முதல், ரயில் முன்பதிவின் முதல் நாளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.

வெள்ளிக்கும் கடன் – ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!

ஏப்ரல் 1 முதல் வெள்ளியையும் அடமானம் வைக்கலாம். தங்கம், வெள்ளிக்கு இணையாக கடன் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தங்கம், வெள்ளிக் கட்டிகள் இடிஎப் ஆகியவற்றை அடமானமாக வைத்து கடன்…

கலசபாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது!

கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கலசபாக்கம் ஏரி தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது. ஏரியின் நீர்மட்டம் அதிகரித்ததால், உபரி நீர் வெளியேறி வருகிறது.

வங்கி கணக்கு & லாக்கர் வசதிக்கு புதிய விதி – 4 வாரிசுகள் நியமனம்!

வங்கியில் கணக்கு, லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்கள் தங்களது வாரிசுதாராக 4 பேரை நியமிக்கலாம் புதிய விதி நவம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது.

கலசபாக்கம் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – 87ஆம் ஆண்டு விழா!

கலசபாக்கத்தில் நடைபெறும் 87ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா நாளை (26.10.2025) காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. (27.10.2025) திங்கட்கிழமை திருப்புரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் இரவு சூரசம்ஹார விழா நடைபெறுகின்றது.

ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று  47 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று (25.10.2025) 47 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் யோகிகள்,…

ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரியில் – தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதற்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி- 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். விண்ணப்ப பதிவு இம்மாத இறுதியில் தொடங்கும். https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 10-ம் தேதிக்குள் நடத்தப்படும் என…

10, 12 பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4-ல் வெளியீடு!

10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4-ல் வெளியீடு என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகிறது ‘Montha’ புயல்!

வங்கக்கடலில் அக்.27ஆம் தேதி உருவாகும் புயலுக்கு ‘Montha’ என பெயரிடப்பட உள்ளது. வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக்.27ஆம் தேதி புயலாகவும்…

கலசபாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஜே.பி. சாப்ட் சிஸ்டம் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி!

கலசபாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு  JB சாப்ட் சிஸ்டம் நிறுவனத்தில் 10 நாட்கள் இன்டர்ன்ஷிப் (Internship) பயிற்சி நடைப்பெற்றது  இந்த பயிற்சியின் நோக்கம், மாணவிகள் அலுவலக பணிகள், கணினி அடிப்படை பயன்பாடுகள், இணையதள நிர்வாகம்,…

கலசபாக்கத்தில் இன்று சான்றிதழ் சரிபார்ப்பு!

 கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்,மற்றும் இரவுக்காவலர் பணி இடங்களுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

கலசபாக்கத்தில் புதிதாக அசோக் காய்கறி கடை திறப்பு!

நமது கலசபாக்கத்தில் புதிதாக அசோக் காய்கறி கடை திறக்கப்பட்டது. இதில் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பெயரில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றது. இடம்:  பஜார் வீதி கலசப்பாக்கம்  தொடர்புக்கு: 9626464475

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.  

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மிக கனமழை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர் வசதிகள் கட்டாயம்!

அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர் வசதிகள் கட்டாயம்: இருக்கை, கழிப்பறை, மின்விசிறி, மாற்றுத்திறனாளி படிக்கட்டு, புகார் பெட்டி, குடிநீர். இல்லாத நிறுவன உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 7-ம் தேதி (24.10.2025) வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா: புதிய செயலி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு செயலி உருவாக்கப்பட உள்ளது. இதில் அருகிலுள்ள பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதிகள் மற்றும் உதவி மையங்கள் போன்ற…

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

BSNL சிறப்பு தீபாவளி சலுகை!

தீபாவளியை ஒட்டி ரூ.1 செலுத்தி புதிய சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை தருகிறது BSNL முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும். நவ.15 வரை இந்த…

ருத்ரா பட்டாசு கடை – தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர்கள்!

எங்களிடம் அனைத்து விதமான பட்டாசுகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும். குடும்பத்துடன் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் பல்வேறு வகை பட்டாசுகள் கிடைக்கின்றன.…

நித்தியா டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள நித்தியா டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் கடையில் தீபாவளி முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.   வாடிக்கையாளர்களுக்காக பன்முக ஆடைகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.   • Formal…

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. மறுநாள் (18ம் தேதி) புதிய மேல் சாந்திகள் தேர்வு நடைபெறும். ஜனாதிபதி வருகையையொட்டி 22ம் தேதி பக்தர்களுக்கு தரிசனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, அக்டோபர் 16 முதல் மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகள் மாநிலம் முழுவதும்…

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு!!

தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 08-ம் தேதி (24.11.2025) திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 17-ம் தேதி (03.12.2025) புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.…

UGC நெட் தேர்வு அட்டவணை அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை தகவல்

நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிச.31 முதல் ஜன.7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும் UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு UGC நெட்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (13.10.2025) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. மின்…

ஆசிரியர் தேர்வு!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!

கலசபாக்கம் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க, குளிக்கவோ, குழந்தைகளை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் ஆக் 11.10 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் “காந்தி ஜெயந்தி தின” கிராம சபை கூட்டம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : கிராம…

உலக தபால் தினம்!

1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உலக தபால் அமைப்பு தொடங்கப்பட்டது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் அக்டோபர் 10, 2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலையிழந்த இளைஞர்கள் தங்களின் கல்வித்…

PIN தேவையில்லை.. கைரேகை போதும்!

UPI பரிவர்த்தனை செய்வதற்கு PIN நம்பருக்குப் பதிலாக, Finger Print அல்லது முக அங்கீகாரம் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் இந்த முறை மூலம் பயனர்களின் பரிவர்த்தனைகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனத்…

அக்டோபர் 11 -ல் இலக்கிய திறனறி தேர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெறும் தேர்வை கண்காணிக்க 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.500…

இந்தியாவில் டிஜிட்டல் நாணயங்கள்!

ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழக திறன் பயிற்சி துறை சார்பில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper Competency Examination) திறனறி தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தகுதி: விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்…

18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர்  ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான…

இன்று இரவு வானில் சூப்பர் மூன்!

இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் இன்று இரவு வானில் தென்படவுள்ளது. இந்த பௌர்ணமியின்போது சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும். நேற்று வானில் தென்பட்ட நிலையில், இன்றும் அதனை காணலாம்.…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (08.10.2025) நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (08.10.2025) புதன்கிழமை அன்று காலை…

தொடர்பு கொள்ள